திருவண்ணாமலை மாவட்டம், செங்கம், துக்காப்பேட்டையில் உள்ள சகாயமாதா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில், காவல்துறை சார்பில், மாணவர்களுக்கு விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்திற்கு டி.எஸ்.பி. சுந்தரமூர்த்தி தலைமை தாங்கி மாணவர்களுக்கு விழிப்புணர்வு கருத்துக்களை பேசினார்.
அப்போது பல இடங்களில் தற்போது கடத்தல் உள்ளிட்ட பல்வேறு சம்பவங்கள் நடைபெறுகின்றது.
எனவே, பள்ளி மாணவ, மாணவிகள் விழிப்போடு இருக்க வேண்டும். பள்ளி வரும் வழியில் தேவையில்லாமல் அறிமுகம் இல்லாதவர்களோடு பேச கூடாது. பொது இடங்களில் சுற்றுவதை தவிர்க்க வேண்டும். அடையாளம் தெரியாதவர்களோடு அவர்களின் வாகனங்களில் செல்லக்கூடாது. யாராவது கிண்டல், கேலி, தகராறு செய்தால் உடன் ஆசிரியர், பெற்றோர்களிடம் தெரிவிக்க வேண்டும். பெற்றோர்கள் பிள்ளைகளை கண்காணிக்க வேண்டும். பள்ளி வாகன ஓட்டுநர்கள் கவனமாக வாகனங்களை இயக்க வேண்டும். வழங்கத்திற்கு மாறான இடங்களில் மாணவர்களை இறக்க கூடாது என கூறினார்.
இந்நிகழ்ச்சியில் இன்ஸ்பெக்டர் பூபதி, எஸ்.ஐ.லதா, தலைமை ஆசிரியர் கணேசன் மற்றும் ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.
-செங்கம். மா.சரவணக்குமார்.