தில்லி, மும்பை உள்ளிட்ட முக்கிய விமான நிலையங்களில் நெரிசலைக் குறைக்க நடவடிக்கை.

தில்லி, மும்பை உள்ளிட்ட முக்கிய விமான நிலையங்களில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

வாகன நெரிசலைத் தவிர்க்க புறப்படும் பகுதியில் கூடுதல் போக்குவரத்து மார்ஷல்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

 பயணிகளுக்கு முன்கூட்டியே வழிகாட்டும் வகையில் நுழைவு வாயில் எண்ணுடன் குறைந்த காத்திருப்பு நேரத்தைக் காட்டும் பலகை வைக்கப்பட்டுள்ளது.

 நுழைவு வாயில்கள், பாதுகாப்புப் பகுதி ஆகியவற்றில் காட்சிப் பலகை திரைகள் நிறுவப்பட்டு, நுழைவு வாயில்களில் காத்திருக்கும் பயணிகளுக்கு நிகழ்நேரத் தகவல் தெரிவிக்கப்படுகிறது. காத்திருப்பு நேரமும், விமான நிறுவனங்களுடன் பகிரப்பட்ட நிகழ்நேர காத்திருப்பு நேர தரவு இணைப்பும்  சமூக வலைதளங்களில் பதிவிடப்படுகிறது.

 முக அங்கீகார தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்ட பயோமெட்ரிக் முறையால் இயக்கப்பட்ட தடையற்ற பயண அனுபவமான டிஜியாத்ராவைப் பயன்படுத்த விமானப் பயணிகள் ஊக்குவிக்கப்படுகிறார்கள்.

 நுழைவு வாயிலில் பயணிகள் விமான டிக்கெட் / போர்டிங் பாஸ் மற்றும் அடையாள சான்று ஆவணத்துடன் தயாராக இருக்க விழிப்புணர்வு சுவரொட்டி ஒட்டப்பட்டுள்ளது. பயணிகளுக்கு உதவ நுழைவு வாயிலில் தனி ஊழியர்கள் நிறுத்தப்பட்டுள்ளனர்.

 மத்திய தொழில் பாதுகாப்புப் படை கூடுதல் பணியாளர்களை நியமிப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

 சிசிடிவி மற்றும் கட்டளை மையம் மூலம் கண்காணித்தல்.

 கூட்ட மேலாண்மைக்கு கவுன்ட் மீட்டரைப் பயன்படுத்துதல் போன்ற நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

ஜூலை, 2023 க்கான காத்திருப்பு நேரங்களின் அடிப்படையில், பாதுகாப்பு மற்றும் குடிவரவு சோதனைச் சாவடிகளில் காத்திருப்பு நேரம் வரும் மாதங்களில் சுமார் 10 நிமிடங்கள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகத்தின் இணை அமைச்சர் திரு  வி.கே.சிங் இன்று மக்களவையில் ஒரு கேள்விக்கு எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் இந்தத் தகவலைத் தெரிவித்தார்.

எம்.பிரபாகரன்

Leave a Reply