ஆஸ்திரேலியாவின் சிட்னியில் மலபார்-2023.

இந்திய கடற்படையின் உள்நாட்டு முன்னணி போர்க்கப்பல்களான ஐ.என்.எஸ் சஹ்யாத்ரி மற்றும் ஐ.என்.எஸ் கொல்கத்தா ஆகியவை ஆகஸ்ட் 11 முதல் 21 வரை சிட்னியில் திட்டமிடப்பட்டுள்ள மலபார் 2023 கடற்பயிற்சியில் அமெரிக்க கடற்படை, ஜப்பான் கடல்சார் தற்காப்பு படை  மற்றும் ராயல் ஆஸ்திரேலிய கடற்படை  ஆகியவற்றின் கப்பல்கள் மற்றும் விமானங்களுடன் பங்கேற்கின்றன.

மலபார் தொடர் கடல்சார் பயிற்சி 1992 ஆம் ஆண்டில் இந்திய கடற்படை மற்றும் அமெரிக்க கடற்படைக்கு இடையிலான இருதரப்பு பயிற்சியாகத் தொடங்கியது மற்றும் இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் நான்கு முக்கிய கடற்படைகளை உள்ளடக்கியதாக பல ஆண்டுகளாக இருக்கிறது. 2020-ஆம் ஆண்டு பயிற்சியில் ராயல் ஆஸ்திரேலிய கடற்படை முதன் முறையாக பங்கேற்றது.

மலபார் 2023 கடற்பயிற்சி இரண்டு கட்டங்களாக நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

எம்.பிரபாகரன்

Leave a Reply