பள்ளி மேலாண்மை குழுவினருக்கு பயிற்சி முகாம்!

image 02திருவண்ணாமலை மாவட்டம் செங்கத்தில் அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்களுக்கு பயிற்சி நடைபெற்றது.

வட்டார வள மையத்தில் நடந்த கூட்டத்திற்கு மேற்பார்வையாளர் கல்யாணசுந்தரம் தலைமை தாங்கினார். ஒன்றிய குழு தலைவர் கணேசன் கலந்து கொண்டு பயிற்சியை துவக்கி வைத்து பேசினார்.

அப்போது செங்கம் ஒன்றியத்திற்கு உட்பட்ட 131 பள்ளிகளில் பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்களுக்கு முதல் கட்டமாக 6 தொகுப்பு கருத்தாய்வு மையங்களில் 3 நாள் பயிற்சிகள் நடத்தப்பட்டன.

இப்போது இரண்டாம் கட்டமாக 5 தொகுப்பு மையங்களில் இப்பயிற்சி தொடங்குகிறது. இதில் பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டு அவர்களின் செயல்பாடுகள் குறித்து தெரிந்து கொண்டு அதன்படி செயல்பட வேண்டும். தமிழக அரசு கல்விக்கு முதலிடம் கொடுத்து பல்வேறு நலதிட்ட உதவிகளை செய்து வருகிறது. இதை பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள் தெரிந்து கொண்டு மாணவர்களுக்கு பயன்படும் வகையில் செயல்பட வேண்டும் என பேசினார்.

கூட்டத்தில் ஓய்வுபெற்ற கல்வி அதிகாரி மாணிக்கம், ஒருங்கிணைப்பாளர் பெரியசாமி மற்றும் ஆசிரியர் பயிற்றுநர்கள் கலந்து கொண்டனர்.

???????????????????????????????

செங்கம் அடுத்த புதுப்பாளையம் அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் நடந்த வட்டார வளமையத்தின் சார்பில் தொகுப்பு வளமைய அளவில் பள்ளி மேலாண்மைகுழு உறுப்பினர்களுக்கான 3 நாள் பயிற்சி நடைபெற்றது.

இப்பயிற்சி அம்மாபாளையம், புதுப்பாளையம், காஞ்சி, பானுநகர், பெரியகுளம், ஆலத்தூர் ஆகிய மையங்களில் நடைபெற்றது. பயிற்சியில் தலைமை ஆசிரியர், பள்ளி மேலாண்மைகுழு தலைவர், கல்வியாளர், சுயஉதவிக்குழு உறுப்பினர்கள், கலந்துகொண்டனர். உறுப்பினர்களுக்கு பள்ளி வளர்ச்சி, கல்வித்தர மேம்பாடு, அடிப்படை கட்டிடபணி தேவைகள் குறித்தும் பொதுமக்களின் பள்ளிக்கான பங்களிப்பு, திட்டமிடல், கட்டாய கல்வி உரிமைச்சட்டம், குழந்தைகள் உரிமை, அனைவருக்கும் கல்வி இயக்க திட்டகூறுகள் குறித்தும் பயிற்சி அளிக்கப்பட்டது.

பயிற்சியினை மாவட்ட கூடுதல் முதன்மைக் கல்வி அலுவலர் முனைவர் புகழேந்தி, உதவி திட்ட அலுவலர் சுப்பிரமணியன் ஆகியோர் மேற்பார்வை செய்து உறுப்பினர்களுக்கு சமுதாய பங்களிப்பு குறித்தும், இலவச கட்டாய கல்வி குறித்தும், அனைவருக்கும் கல்வி இயக்க திட்டகூறுகள் குறித்தும் விளக்கி கூறினார்.

பயிற்சி மேற்பார்வையின் போது வட்டார வளமைய மேற்பார்வையாளர் மணவாளன், உதவி தொடக்க கல்வி அலுவலர் ஜான் வின்சென்ட் மேற்பார்வையில் நடைபெற்றது.

கருத்தாளர்களாக ஆசிரியர் பயிற்றுநர்கள் முருகன், கார்திகேயன், எலன் கிரேசி, சாந்த், இராமச்சந்திரன், தண்டபாணி, ஆசிரியர்கள் ஏழுமலை, பழனி, அமல் ராஜ், அந்தோனிதாஸ், வேல்முருகன் ஆகியோர் பயிற்சி அளித்தனர்.

– செங்கம் மா.சரவணக்குமார்.