ஜி-20 ஊழல் தடுப்பு அமைச்சர்கள் கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோதி உரை.

கொல்கத்தாவில் நடைபெற்ற ஜி 20 ஊழல் எதிர்ப்பு அமைச்சர்கள் கூட்டத்தில் பிரதமர் திரு. நரேந்திர மோடி காணொலிக் காட்சி மூலம் உரையாற்றினார்.

கொல்கத்தாவில் உள்ள நோபல் பரிசு பெற்ற குருதேவ் ரவீந்திரநாத் தாகூரின் நகருக்கு பிரமுகர்களை வரவேற்ற பிரதமர், இது முதல் ஜி 20 ஊழல் எதிர்ப்பு அமைச்சர்கள் கூட்டம் என்று கூறினார். தாகூரின் எழுத்துக்களைக் குறிப்பிட்ட பிரதமர், பேராசைக்கு எதிராக எச்சரித்தார், ஏனெனில் அது உண்மையை உணர விடாமல் தடுக்கிறது. ‘பேராசை வேண்டாம்’ என்று பொருள்படும் ‘மா கிரிதா’வுக்குப் பாடுபடும் பண்டைய இந்திய உபநிடதங்களையும் அவர் மேற்கோள் காட்டினார்.

ஊழலின் மிக உயர்ந்த தாக்கத்தை ஏழைகள் மற்றும் விளிம்புநிலை மக்கள் சுமக்கிறார்கள் என்பதை பிரதமர் சுட்டிக்காட்டினார். இது வளப் பயன்பாட்டை பாதிக்கிறது, சந்தைகளை சிதைக்கிறது, சேவை வழங்கலை பாதிக்கிறது,  இறுதியில் மக்களின் வாழ்க்கைத் தரத்தை குறைக்கிறது என்று அவர் மேலும் கூறினார். அர்த்தசாஸ்திரத்தில் கௌடில்யரைப் பற்றிக் குறிப்பிட்ட பிரதமர், மாநிலத்தின் வளங்களை மேம்படுத்தி அதன் மக்களின் நலனை அதிகப்படுத்துவது அரசாங்கத்தின் கடமை என்று கூறினார். இந்த இலக்கை அடைய ஊழலுக்கு எதிராகப் போராட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்திய அவர், இது மக்களுக்கு அரசாங்கத்தின் புனிதமான கடமை என்றும் கூறினார்.

“ஊழலை ஒருபோதும் சகித்துக்கொள்ள மாட்டோம்” என்ற கண்டிப்பானக் கொள்கையை இந்தியா கொண்டுள்ளது என்று குறிப்பிட்ட பிரதமர், வெளிப்படையான மற்றும் பொறுப்பான சுற்றுச்சூழல் அமைப்பை உருவாக்க இந்தியா தொழில்நுட்பம் மற்றும் மின் ஆளுமையைப் பயன்படுத்துகிறது என்பதை சுட்டிக்காட்டினார். மக்கள் நலத் திட்டங்கள் மற்றும் அரசுத் திட்டங்களில் உள்ள கசிவுகள் மற்றும் இடைவெளிகள் சரி செய்யப்படுகின்றன என்றும் அவர் குறிப்பிட்டார். இதன் விளைவாக, இந்தியாவில் கோடிக்கணக்கான மக்கள் தங்கள் வங்கிக் கணக்குகளில் 360 பில்லியன் டாலருக்கும் அதிகமான நேரடிப் பலன் பரிமாற்றங்களைப் பெற்றுள்ளனர். இதனால் 33 பில்லியன் டாலருக்கும் அதிகமான தொகையை சேமிக்க உதவியுள்ளது என்று பிரதமர் கூறினார். வணிகங்களுக்கான பல்வேறு நடைமுறைகளை அரசாங்கம் எளிமைப்படுத்தியுள்ளது என்று தெரிவித்த பிரதமர், வாடகைக் கோரும் வாய்ப்புகளை நீக்கிய அரசு சேவைகளின் ஆட்டோமேஷன் மற்றும் டிஜிட்டல்மயமாக்கலின் செயல்பாட்டை எடுத்துக்காட்டினார்.

எஸ்.சதிஸ் சர்மா

Leave a Reply