செங்கோட்டையில் இருந்து சுதந்திர தின விழாவை சிறப்பு விருந்தினர்களாக காண நாடு முழுவதும் இருந்து 50 செவிலியர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
புதுதில்லியில் நடைபெறும் சுதந்திர தின விழாவில் பங்கேற்க எங்களை அழைத்த மாண்புமிகு பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்களுக்கும், இந்திய அரசுக்கும் எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். கொரோனா காலத்தில் நாங்கள் மேற்கொண்ட முயற்சிகளுக்கு கிடைத்த அங்கீகாரம் இது: அனிதா தோமர்
கொரோனா காலத்தில் எங்கள் முயற்சிகளையும் அர்ப்பணிப்பையும் அங்கீகரித்த அரசுக்கு எனது பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். பல்வேறு வளர்ச்சித் திட்டங்களின் மூலம் அரசு காட்டிய செவிலியர் சார்பு மனப்பான்மைக்கும் நான் நன்றி கூற விரும்புகிறேன்: திருமதி வந்தனா கவுசிக்
புதுதில்லியில் நடைபெறும் சுதந்திர தின கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக, நாடு முழுவதிலுமிருந்து 50 செவிலியர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்கள் சிறப்பு விருந்தினர்களாக செங்கோட்டையின் கொத்தளத்தில் இருந்து கொண்டாட்டங்களைக் காணவும் பங்கேற்கவும் அழைக்கப்பட்டுள்ளனர். இந்த சிறப்பு விருந்தினர்கள் வாழ்க்கையின் பல்வேறு துறைகளைச் சேர்ந்த 1800
சிறப்பு விருந்தினர்களில் ஒரு பகுதியாக இருப்பார்கள். இதில் 660-க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த 400-க்கும் மேற்பட்ட கிராமப் பஞ்சாயத்துத் தலைவர்கள் அடங்குவர்; உழவர் உற்பத்தியாளர் அமைப்பு திட்டத்தில் 250 உறுப்பினர்கள்; பிரதமரின் வேளாண் வருவாய் ஆதரவு நிதி திட்டம் மற்றும் பிரதமரின் திறன் மேம்பாட்டுத்திட்டம் ஆகியவற்றில் தலா 50 பங்கேற்பாளர்கள்; புதிய நாடாளுமன்ற கட்டிடம் உட்பட சென்ட்ரல் விஸ்டா திட்டத்தின் 50 ஷ்ரம் யோகிகள் (கட்டுமான தொழிலாளர்கள்); தலா 50 கதர் தொழிலாளர்கள், எல்லை சாலைகள் அமைத்தல், அமிர்த நீர்நிலைகள் பணிகளில் ஈடுபட்டுள்ளவர்கள் மற்றும் 50 தொடக்கப் பள்ளி ஆசிரியர்கள், செவிலியர்கள் மற்றும் மீனவர்கள் தலா 50 பேர்.
நாடு முழுவதிலும் உள்ள அனைத்து தரப்பு மக்களையும் அழைத்து, கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக இருக்க வேண்டும் என்ற முன்முயற்சியை ‘ஜன் பகிதாரி’ என்ற தொலைநோக்கு பார்வைக்கு ஏற்ப அரசு எடுத்துள்ளது.
திவாஹர்