இலங்கை, யாழ்ப்பாண மாவட்டத்தில், பருத்தித்துறை இன்பருட்டிப் பகுதியில், கேரளாவில் இருந்து கடத்திவரப்பட்ட கஞ்சா பதுக்கி வைத்திருப்பதாக, 26.12.2014 அன்று அதிகாலை பருத்தித்துறை பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின்படி பொலிஸார் நேரில் சென்று பார்த்தபோது, சந்தேகத்திற்கு இடமாக சாக்கு பொதிகள் இருப்பதை கண்டனா்.
பொலிஸார் அதனை மீட்டு பிரித்து பார்த்தபோது அதற்குள் 25 கிலோ கஞ்சா இருப்பதை கண்டு பருத்தித்துறை பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு வந்தனா். இது தொடா்பாக யாரையும் இதுவரை கைது செய்யவில்லை. இது தொடா்பாக பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
-எஸ்.சதிஸ் சர்மா.