தூய்மையான மற்றும் ஆரோக்கியமான சுற்றுச்சூழலுக்கு வழிவகுக்கும் நிலக்கரி போக்குவரத்தில் புரட்சியை ஏற்படுத்தும் முதல் மைல் இணைப்பு.

இந்தியாவின் எரிசக்தி பாதுகாப்பை வலுப்படுத்தவும், இறக்குமதி செய்யப்படும் நிலக்கரியைச் சார்ந்திருப்பதைக் குறைப்பதன் மூலம் தற்சார்பு இந்தியாவின் தொலைநோக்கு பார்வையை நிறைவேற்றவும், நிலக்கரி அமைச்சகம் தேசிய நிலக்கரி போக்குவரத்து திட்டத்தை உருவாக்குவதில் தீவிரமாக செயல்பட்டு வருகிறது, இதில் நிலக்கரி சுரங்கங்களுக்கு அருகிலுள்ள ரயில்வே சைடிங் மூலம் முதல் மைல் இணைப்பு  அடங்கும். முதல் மைல் இணைப்பு  திட்டங்களின் கீழ், இயந்திரமயமாக்கப்பட்ட நிலக்கரி போக்குவரத்து மற்றும் கையாளுதல்  முறையை மேம்படுத்த நிலக்கரி அமைச்சகம் இத்திட்டத்தை தயாரித்துள்ளது.
நிலையான வளர்ச்சி மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கான தொடர்ச்சியான தேடலில், முதல் மைல் இணைப்பு என்ற கருத்தாக்கம்  உருவெடுத்துள்ளது. இந்த அற்புதமான அணுகுமுறை நிலக்கரி போக்குவரத்தில் புரட்சியை ஏற்படுத்துகிறது, இது சுற்றுச்சூழலில் நேர்மறையான மற்றும் நீடித்த தாக்கத்தை உருவாக்குகிறது.
முதல் மைல் இணைப்பு, சுரங்கப் பகுதிகளில் நிலக்கரியை அருகிலுள்ள ரயில்வே சைடிங்கிற்கு கன்வேயர்கள் மூலம் கொண்டு சென்று  சாலை போக்குவரத்தை தவிர்க்கிறது. இதனால்,  சாலையில் லாரிகளின் எண்ணிக்கையையும் காற்று மாசுபாடு, போக்குவரத்து நெரிசல் மற்றும் சாலை சேதம் போன்ற தொடர்புடைய சுற்றுச்சூழல் தாக்கங்கள்  குறைகின்றன. இது தூய்மையான மற்றும் ஆரோக்கியமான சூழலுக்கு வழிவகுக்கிறது.
885 மெட்ரிக் டன் திறன் கொண்ட 67 முதல் மைல் இணைப்பு திட்டங்கள், மூன்று கட்டங்களாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பிரதமர் விரைவு சக்தியின் இலக்கிற்கு இணங்க, நிலக்கரி அமைச்சகம் ரூ.26,000 கோடி செலவில் ரயில்வே திட்டங்களை மேற்கொண்டுள்ளது.
மேலும், இயற்கை வளங்கள் மற்றும் பசுமைப் போர்வையைப் பாதுகாப்பதில் இந்த திட்டம் பங்களிக்கிறது. இந்த நடைமுறையை பின்பற்றுவதன் மூலம், நிலக்கரி சுரங்க நடவடிக்கைகள் நீண்ட காலத்திற்கு பொருளாதார ரீதியாக மிகவும் சாத்தியமானதாக மாறும். தொழில்நுட்பத்தால் இயக்கப்படும் செயல்முறைகளை நடைமுறைப்படுத்துவது உற்பத்தித்திறனை அதிகரிப்பதுடன் மட்டுமல்லாமல், செயல்பாட்டு செலவுகளையும் குறைக்கிறது, இது நிலக்கரித் துறையின் ஒட்டுமொத்த லாபத்திற்கு பங்களிக்கிறது. நிலையான போக்குவரத்தை நோக்கிய இந்த மாற்றம் காலநிலை மாற்றத்தைத் தணிப்பதிலும் காற்றின் தரத்தை மேம்படுத்துவதிலும் முக்கிய பங்கு வகிக்கிறது.

திவாஹர்

Leave a Reply