இரண்டு கோடி சகோதரிகளை லட்சாதிபதிகளாக்க உறுதி; மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ட்ரோன் பயிற்சி: பிரதமர் நரேந்திர மோதி.

பிரதமர் திரு நரேந்திர மோடி நாட்டின் இரண்டு கோடி சகோதரிகளை லட்சாதிபதிகளாக்க நாட்டிலுள்ள மகளிர் சுய உதவிக் குழுக்களுடன் அரசு இணைந்து பணியாற்றி வருவதாக, செங்கோட்டையில் ஆற்றிய 77வது சுதந்திர தின உரையில் தெரிவித்துள்ளார். நாட்டில் இன்று 10 கோடி பெண்கள் மகளிர் சுய உதவிக் குழுக்களுடன் இணைந்துள்ளதாகக் கூறினார். இன்று கிராமங்களில் ஒரு சகோதரி வங்கியிலும், ஒரு சகோதரி அங்கன்வாடியிலும் ஒரு சகோதரி மருந்துகளை விநியோகம் செய்வதையும் காணலாம் என்றார்.

மேலும் வேளாண் தொழில்நுட்பம் குறித்துப் பேசிய பிரதமர், கிராமப்புற வளர்ச்சியில் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தின் திறனைப் பெருமளவு பயன்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தினார். 15,000 மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ட்ரோன்களை இயக்குவதற்கும் பழுதுபார்ப்பதற்கும் கடன் மற்றும் பயிற்சி வழங்கப்படும் என்றும் பிரதமர் கூறினார். “ட்ரோன் கி உடான்” திட்டம் இந்த மகளிர் சுய உதவிக் குழுக்களால் மேற்கொள்ளப்படும் என்றும் பிரதமர் கூறினார்.

திவாஹர்

Leave a Reply