77-வதுசுதந்திர தினத்தை முன்னிட்டு செங்கோட்டையில் இருந்து உரையாற்றிய பிரதமர் திரு. நரேந்திர மோடி, உலகின் 5வது பெரிய பொருளாதாரமாக இந்தியா உயர்ந்ததற்கு 140 கோடிஇந்திய மக்களின் முயற்சிகளே காரணம் என்றார். கசிவுகளைத் தடுத்து, வலுவான பொருளாதாரத்தை உருவாக்கி, ஏழைகளின் நலனுக்காக அதிக பணத்தை இந்த அரசு செலவழித்ததால் இது நிகழ்ந்துள்ளது என்று அவர் கூறினார்.
பிரதமர் திரு. மோடி, “இன்று நான் மக்களுக்குச் சொல்ல விரும்புவது என்னவென்றால், நாடு பொருளாதார ரீதியாக வளமாக இருக்கும்போது, அது கஜானாவை நிரப்பாது; இது தேசத்தின் மற்றும் அதன் மக்களின் திறனை அதிகரிக்கிறது. அரசாங்கம் தனது குடிமக்களின் நலனுக்காக ஒவ்வொரு பைசாவையும் செலவிடுவதாக உறுதியளித்தால் முடிவுகள் தானாகவே வரும். 10 ஆண்டுகளுக்கு முன்பு மத்திய அரசு மாநிலங்களுக்கு ரூ.30 லட்சம் கோடி அனுப்பியது. கடந்த 9 ஆண்டுகளில் இந்த எண்ணிக்கை ரூ.100 லட்சம் கோடியை எட்டியுள்ளது. இந்த எண்களைப் பார்க்கும்போது, இவ்வளவு பெரிய மாற்றம் திறன் அதிகரித்திருப்பதை நீங்கள் உணர்வீர்கள்!”என்று கூறினார்.
சுயவேலைவாய்ப்பைப் பொறுத்தவரை, “இளைஞர்கள் தங்கள் தொழிலுக்கான சுயவேலைவாய்ப்பிற்காக ரூ .20 லட்சம் கோடிக்கு மேல் வழங்கப்பட்டுள்ளது. 8 கோடி பேர் புதிய தொழில் தொடங்கியுள்ளனர், அது மட்டுமல்ல, ஒவ்வொரு தொழிலதிபரும் ஒன்று அல்லது இரண்டு பேருக்கு வேலைவாய்ப்பு அளித்துள்ளனர். எனவே, முத்ரா திட்டம் மூலம் பயனடையும் 8 கோடி குடிமக்கள் 8-10 கோடி புதிய மக்களுக்கு வேலைவாய்ப்பை வழங்கும் திறனைக் கொண்டுள்ளனர்.
திவாஹர்