இந்திய ரயில்வேயில் சுமார் 32,500 கோடி ரூபாய் செலவில் மொத்தம் 2,339 கி.மீ. தூரத்திற்கான 7 பல வழித்தட திட்டங்களுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

இந்திய ரயில்வேயில் 100 சதவீத மத்திய அரசு நிதியுதவியுடன் சுமார் 32,500 கோடி ரூபாய் செலவில் மொத்தம் 2,339 கி.மீ. தூரத்திற்கான 7 பல வழித்தட திட்டங்களுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையில் இன்று நடைபெற்ற பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக்குழு ஒப்புதல் அளித்துள்ளது. இந்த திட்டங்களால் போக்குவரத்து எளிதாவதுடன் நெரிசல் குறையும், இந்திய ரயில்வேயின் பரபரப்பான பிரிவுகளில் தேவைப்படும் அடிப்படை கட்டமைப்பு மேம்பாட்டினை இத்திட்டங்கள் வழங்கும்.

உத்தரப்பிரதேசம், பீகார், தெலங்கானா, ஆந்திரப் பிரதேசம், மகாராஷ்டிரா, குஜராத், ஒடிசா, ஜார்கண்ட், மேற்குவங்கம் என 9 மாநிலங்களில் உள்ள 35 மாவட்டங்களை உள்ளடக்கிய  இந்த திட்டங்களால் இந்திய ரயில்வேயில் தற்போதுள்ள ரயில் பாதை கட்டமைப்பில் 2339 கி.மீ. தூரத்தை அதிகரிக்கும். இம்மாநிலங்களில் உள்ள மக்களுக்கு 7.06 கோடி மனித நாட்கள் வேலைவாய்ப்பையும் வழங்கும்.

எம்.பிரபாகரன்

Leave a Reply