இந்திய ராணுவ வினாடி வினா 2023 – கார்கில் வெற்றியின் 25 வது ஆண்டை நினைவுகூரும் வகையில் ‘மனங்களின் போர்’ தொடங்கப்பட்டது.

அறிவை வளர்ப்பதற்கும், இளைஞர்களுக்கு அதிகாரமளிப்பதற்கும் ஒரு முக்கியப் படியாக, இந்திய ராணுவம் பெருமையுடன் ‘மனங்களின் போர்பேட்டில் ஆஃப் மைண்ட்ஸ்)’ -இந்திய ராணுவ வினாடி வினா 2023ஐ அதன் வசீகரிக்கும் லோகோவுடன் இன்று தில்லி கன்டோன்மென்டில் உள்ள மானெக்சா மையத்தில் வெளியிட்டது. கார்கில் வெற்றி தின  கொண்டாட்டங்களின் 25வது ஆண்டு தொடக்கத்தை அறிவிக்கும் வகையில், இந்த வினாடி வினா போட்டி கார்கில் போரில் இந்திய ஆயுதப் படைகளின் வெற்றியைக் கொண்டாடுகிறது. அந்த வெற்றியை சாத்தியமாக்கியவர்களின் தைரியம் மற்றும் தீரத்திற்கு  மனமார்ந்த அஞ்சலியை செலுத்துகிறது. புதிதாக வெளியிடப்பட்ட லோகோவால் அடையாளப்படுத்தப்பட்ட இந்த மைல்கல் முன்முயற்சி, அறிவுசார் முயற்சியை வளர்ப்பதற்கும், நாடு முழுவதும் உள்ள இளைஞர்களை ஊக்குவிப்பதற்கும் ராணுவத்தின் உறுதிப்பாட்டை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. இந்நிகழ்வு கடந்த காலத்தைக் கொண்டாடுவதோடு, இளைஞர்களிடையே ஆர்வத்தையும் கற்றல் உணர்வையும் தூண்டுவதையும், நாளைய தலைவர்களை உருவாக்குவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.

இந்த நிகழ்ச்சியில் ராணுவ துணை தளபதி லெப்டினன்ட் ஜெனரல் எம்.வி.சுசீந்திர குமார் கலந்து கொண்டார். வினாடி வினா போட்டிக்கான லோகோவை ஏ.டபிள்யூ.டபிள்யூ.ஏ தலைவர் திருமதி அர்ச்சனா பாண்டே வெளியிட்டார். பரம்வீர் சக்ரா விருது பெற்ற சுபேதார் மேஜர் (கவுரவ கேப்டன்) யோகேந்திர சிங் யாதவ் (ஓய்வு), சுபேதார் மேஜர் சஞ்சய் குமார், இந்தியாவின் 36 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள பள்ளிகளின் முதல்வர்களும் கலந்து கொண்டனர்.

திவாஹர்

Leave a Reply