ராமநாதபுரம் மாவட்டத்தில் பசுமை தமிழ்நாடு இயக்கத்தின் கீழ் 1 கோடி மரக்கன்றுகள் நடும் திட்டத்தை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்தார். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று (18.8.2023) இராமநாதபுரம் ஆய்வு மாளிகையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், இராமநாதபுரம் மாவட்டத்தில் பசுமை தமிழ்நாடு இயக்கத்தின் கீழ் ஒரு கோடி மரக்கன்றுகள் நடும் திட்டத்தினை பயனாளிகளுக்கு மரக்கன்றுகளை வழங்கி தொடங்கி வைத்தார். தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் கனவு திட்டமான பசுமை தமிழ்நாடு இயக்கம் மூலம் வனப் பரப்பினை அதிகரிக்கும் நோக்கத்தோடு இராமநாதபுரம் மாவட்டத்தில் ஒரு கோடி மரக்கன்றுகள் உற்பத்தி செய்ய திட்டமிடப்பட்டு பல்வேறு துறைகளின் மூலம் மாவட்டம் முழுவதும் வளர்க்கப்பட்டு வருகிறது.
எஸ்.திவ்யா