நாடாளுமன்றத்தில் கடந்த வாரம் நிறைவேற்றப்பட்ட அனுசந்தன் தேசிய ஆராய்ச்சி அறக்கட்டளை மசோதா, ஆய்வு தொடர்பான அம்சங்கள் சமமான நிதி மற்றும் வளங்களை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது: மத்திய இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங்.

நாடாளுமன்றத்தில் கடந்த வாரம் நிறைவேற்றப்பட்ட “அனுசந்தன் தேசிய ஆராய்ச்சி அறக்கட்டளை” (ஏ.என்.ஆர்.எஃப்) மசோதா ஆராய்ச்சி மற்றும் கல்வியில் சமமான நிதி மற்றும் வளங்களை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது என்று  மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை இணையமைச்சர் திரு ஜிதேந்திர சிங் கூறியுள்ளார்.

புதுதில்லியில் நடைபெற்ற அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தில் திறன் மேம்பாடு குறித்த பயிலரங்கில் பேசிய அவர், தொழில்நுட்பம் சார்ந்த வளர்ச்சிக்காக தனியார் ஆராய்ச்சி அறக்கட்டளைகளை அரசுத் துறைகளுடன் ஒருங்கிணைக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். பிரதமர் திரு. நரேந்திர மோடியின் திட்டமான அனுசந்தன் தேசிய ஆராய்ச்சி அறக்கட்டளை (ஏ.என்.ஆர்.எஃப்),  ஆய்வுத்துறையில் வளர்ந்த நாடுகளின் வரிசையில் இந்தியாவை உயர்த்தும் என்று அமைச்சர் தெரிவித்தார்.

ஆராய்ச்சியில் தனிப்பட்ட அணுகுமுறையைக் காட்டிலும் குழு சார்ந்த அணுகுமுறையைப் பின்பற்ற வேண்டும் என்று அவர் கூறினார்.  அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தில்  திறன் மேம்பாட்டிற்கான ஒரு வரம்பு வரையறுக்கப்பட வேண்டும் என்று அவர் கூறினார்.

உலகின் வளர்ந்த நாடுகளுடன் இணைந்து அதிநவீன தொழில்நுட்ப முன்னேற்றங்களை இந்தியா அடைந்துவருகிறது என்று கூறிய அவர், தேசிய குவாண்டம் மிஷன் (என்.க்யூ.எம்) மற்றும் விண்வெளித் துறையின் சாதனைகளை எடுத்துக்காட்டாகத் தெரிவித்தார்.

செயற்கை நுண்ணறிவு மற்றும் குவாண்டம் தொழில்நுட்பத்தில் செய்யப்படும் முதலீடுகள் நமது அன்றாட வாழ்க்கையில் சிறந்த முன்னேற்றங்களுக்கு வழிவகுக்கும் என்று திரு ஜிதேந்திர சிங் கூறினார். திறன் மேம்பாட்டு ஆணையத்தின் தலைவர் திரு அடில் ஜைனுல்பாய், மத்திய அரசுக்கான முதன்மை அறிவியல் ஆலோசகர் அஜய் சூட், அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறைச் செயலாளர் டாக்டர் ராஜேஷ் கோகலே மற்றும் பல மூத்த விஞ்ஞானிகள் மற்றும் அதிகாரிகள் இந்த பயிலரங்கில் பங்கேற்றனர்.

எஸ்.சதிஸ் சர்மா

Leave a Reply