தமிழ்நாடு, மேற்கு வங்கம், பஞ்சாப், தெலங்கானா, கேரளா, ஹரியானா, பீகார், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில், 75 அமிர்த நீர்நிலைகள் அமைக்க வேண்டும் என்ற இலக்கை சில மாவட்டங்கள் எட்டவில்லை.
இதுவரை, அடையாளம் காணப்பட்ட 1,12,277 அமிர்த நீர்நிலைகளில், 81,425 அமிர்த நீர்நிலைகளுக்கான பணிகள் தொடங்கப்பட்டுள்ளன, மொத்தம் 66,278 அமிர்த நீர்நிலைகள் கட்டப்பட்டுள்ளன / புதுப்பிக்கப்பட்டுள்ளன.
பின்னணி :
ஒவ்வொரு மாவட்டமும் குறைந்தபட்சம் 75 அமிர்த நீர்நிலைகளைக் கட்ட / புனரமைக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் அமிர்த நீர்நிலைகள் இயக்கம் கடந்த ஆண்டு ஏப்ரல் 24 அன்று பிரதமரால் தொடங்கப்பட்டது. 50,000 அமிர்த நீர்நிலைகள் என்ற தேசிய இலக்கு உரிய வழிகாட்டுதல்களைப் பின்பற்றுவதன் மூலம் அடையப்பட்டுள்ளது.
ஊரக வளர்ச்சித் துறை, நில வளத் துறை, குடிநீர் மற்றும் சுகாதாரத் துறை, நீர்வளத் துறை, பஞ்சாயத்து ராஜ் அமைச்சகம், வனம், சுற்றுச்சூழல் மற்றும் பருவநிலை மாற்ற அமைச்சகம், இரயில்வே அமைச்சகம், சாலை, போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் ஆகிய 8 மத்திய அமைச்சகங்கள்/ துறைகள் பங்கேற்கும் முழு அரசு அணுகுமுறையுடன் இந்த இயக்கம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் பாஸ்கராச்சார்யா தேசிய விண்வெளி பயன்பாடு மற்றும் புவி தகவலியல் நிறுவனம் (பிசாக்-என்) இந்த திட்டத்திற்கான தொழில்நுட்ப கூட்டாண்மை நிறுவனமாக நியமிக்கப்பட்டுள்ளது. மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம், 16வது நிதிக்குழு மானியம், நீர்வடிப்பகுதி மேம்பாட்டுக் கூறு, ஹர் கேத் கோ பானி போன்ற பி.எம்.கே.எஸ்.ஒய் துணைத் திட்டங்கள் மற்றும் மாநிலங்களின் சொந்தத் திட்டங்கள் போன்ற பல்வேறு திட்டங்களை மறுசீரமைப்பதன் மூலம் இந்த இயக்கம் மாநிலங்கள் மற்றும் மாவட்டங்கள் மூலம் செயல்படுகிறது. இந்த முயற்சிகளுக்கு துணையாக குடிமக்கள் மற்றும் அரசு சாரா வளங்களை அணிதிரட்டுவதை இந்த இயக்கம் ஊக்குவிக்கிறது என்பதையும் குறிப்பிடலாம்.
எம்.பிரபாகரன்