புதுதில்லியில் இன்று (ஆகஸ்ட் 21, 2023) ராணுவ மனைவிகள் சங்கம் (ஏ.டபிள்யூ.டபிள்யூ.ஏ) ஏற்பாடு செய்திருந்த ‘ராணுவ மனைவிகளின் அஸ்மிதா-உத்வேகமூட்டும் கதைகள்’ நிகழ்ச்சியில் இந்தியக் குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்மு கலந்து கொண்டார்.
நிகழ்ச்சியில் பேசிய குடியரசுத் தலைவர் , அனைத்து இந்தியர்கள் சார்பிலும் ‘வீர் நரி’களுக்கு நன்றி தெரிவித்தார். அஸ்மிதா ஐகான்ஸ் என்று கவுரவிக்கப்பட்ட ‘வீர் நரி’களை அவர் பாராட்டினார். வீர் நரிகளின் நலனுக்காக ஏ.டபிள்யூ.டபிள்யூ.ஏ மேற்கொண்ட முயற்சிகளையும் அவர் பாராட்டினார்.
ஒரு சமூகம் மற்றும் தேசத்தின் கண்ணியம் என்பது பெண்களின் சுயமரியாதையை அடிப்படையாகக் கொண்டது என்று குடியரசுத் தலைவர் கூறினார். சில பழைய யோசனைகளை விட்டுவிட்டு புதிய யோசனைகளை ஏற்றுக்கொள்ள வேண்டியதன் அவசியத்தை அவர் எடுத்துரைத்தார். ‘ஒவ்வொரு வெற்றிகரமான ஆணுக்குப் பின்னாலும் ஒரு பெண் இருக்கிறாள்’ என்ற பழமொழியைக் குறிப்பிட்டார். ‘ஒவ்வொரு வெற்றிகரமான ஆணுக்கும் அருகில், ஒரு பெண் இருக்கிறாள்’ என்பது புதிய பழமொழியாக இருக்க வேண்டும் என்று அவர் மேலும் கூறினார். முற்போக்கான சிந்தனைகளை பின்பற்றுவதன் மூலம் பெண்களின் அடையாளத்தையும் தன்னம்பிக்கையையும் வலுப்படுத்த முடியும் என்று அவர் பகிர்ந்து கொண்டார்.
திவாஹர்