உத்தரப் பிரதேசத்தில் இருந்து மாநிலங்களவைக்கான இடைத்தேர்தல்.

நாடாளுமன்ற மாநிலங்களவைக்கு உத்தரப் பிரதேசத்தில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட திரு ஹர்த்வார் துபே 26.06.2023 அன்று மரணமடைந்ததை அடுத்து அந்த இடம் காலியாக உள்ளது. 25.11.2026 வரையிலான இந்த இடத்தை நிரப்ப உத்தரப் பிரதேசத்தில் இருந்து மாநிலங்களவைக்கு இடைத்தேர்தல் நடத்த தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது.

இதற்கான கால அட்டவணை:

நிகழ்வுகள் தேதிகள்
அறிவிக்கை வெளியீடு 29.08.2023 (செவ்வாய்க்கிழமை)
வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாள் 05.09.2023 (செவ்வாய்க்கிழமை)
மனுக்கள் பரிசீலனை 06.09.2023 (புதன்கிழமை)
மனுக்களைத் திரும்பப்பெறக்
கடைசி நாள்
08.09.2023 (வெள்ளிக்கிழமை)
வாக்குப்பதிவு நாள் 15.09.2023 (வெள்ளிக்கிழமை)
வாக்குப்பதிவு நேரம் காலை 9.00 மணி முதல் பிற்பகல் 4.00 மணி வரை
வாக்கு எண்ணிக்கை 15.09.2023 (வெள்ளிக்கிழமை) பிற்பகல் 5.00 மணி
தேர்தல் நடவடிக்கைகள்
முடிவடைவதற்கான காலம்
19.09.2023 (செவ்வாய்க்கிழமை)-க்கு முன்

ஜார்கண்ட், திரிபுரா, கேரளா, மேற்குவங்கம், உத்தரப் பிரதேசம், உத்தராகண்ட் ஆகிய மாநிலங்களில் காலியாக உள்ள இடங்களுக்கு இடைத்தேர்தல் நடத்துவதற்குத் தேர்தல் ஆணையத்தால் வெளியிடப்பட்ட கொவிட் -19-ன் வழிகாட்டுதல்கள், 08.08.2023 தேதியிட்ட செய்திக் குறிப்பின் பத்தி 6-ல் உள்ளன, இவை  பொருந்தக்கூடிய இடங்களில்,  அனைத்து நபர்களாலும் பின்பற்றப்பட வேண்டியவை.

திவாஹர்

Leave a Reply