மகத்தான கிரிக்கெட் வீரரும், பாரத ரத்னா விருது பெற்றவருமான சச்சின் டெண்டுல்கர் இந்திய தேர்தல் ஆணையத்தின் விளம்பரத் தூதராக தனது இன்னிங்ஸைத் தொடங்கினார்.

மகத்தான கிரிக்கெட் வீரரும், பாரத ரத்னா விருது பெற்றவருமான சச்சின் ரமேஷ் டெண்டுல்கர், இந்திய தேர்தல் ஆணையத்தின் வாக்காளர் விழிப்புணர்வு மற்றும் கல்விக்கான தூதராக ஒரு புதிய இன்னிங்ஸைத் தொடங்கினார். புதுதில்லி ஆகாஷ்வாணி ரங் பவனில் தலைமைத் தேர்தல் ஆணையர் திரு ராஜீவ் குமார் மற்றும் தேர்தல் ஆணையர்கள் திரு அனுப் சந்திர பாண்டே, திரு அருண் கோயல் ஆகியோர் முன்னிலையில் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சியில் 3 ஆண்டுகளுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. எதிர்வரும் தேர்தல்களில், குறிப்பாக 2024 பொதுத் தேர்தல்களில் வாக்காளர்களின் பங்களிப்பை அதிகரிப்பதற்காக இளைஞர்களுடன் டெண்டுல்கரின் இணையற்ற தாக்கத்தைப் பயன்படுத்துவதற்கான ஒரு குறிப்பிடத்தக்க, இந்த ஒத்துழைப்பு குறிக்கிறது. குடிமக்கள், குறிப்பாக இளைஞர்கள் மற்றும் நகர்ப்புற மக்களுக்கு இடையிலான இடைவெளியைக் குறைப்பதையும், அதன் மூலம் நகர்ப்புற மற்றும் இளைஞர்களிடம் தேர்தல் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதை தேர்தல் ஆணையம் நோக்கமாகக் கொண்டுள்ளது.

இந்திய தேர்தல் ஆணையத்தின் விளம்பரத் தூதராக சச்சின் டெண்டுல்கர் தனது ஆர்வத்தையும் அர்ப்பணிப்பையும் வெளிப்படுத்தினார், மேலும் இந்தியா போன்ற துடிப்பான ஜனநாயகத்திற்கு, நாட்டை கட்டமைப்பதில் இளைஞர்கள் முக்கியப் பங்கு வகிக்கிறார்கள் என்று கூறினார். விளையாட்டுப் போட்டிகளின்போது இந்திய அணிக்காகத் துடிக்கும் இதயங்கள், ‘இந்தியா, இந்தியா!’ என்ற ஒருமித்த ஆரவாரத்துடன், நமது விலைமதிப்பற்ற ஜனநாயகத்தை முன்னெடுத்துச் செல்ல அதே வழியில் துடிக்கும். அதைச் செய்வதற்கான ஒரு எளிய ஆனால் மிகவும் சக்திவாய்ந்த வழி, நம் வாக்குகளை தவறாமல் செலுத்துவதாகும்.

அப்போது பேசிய அவர், மைதானங்களில் கூட்டம் கூடுவது முதல் வாக்குச்சாவடிகளில் கூட்டம் அலைமோதுவது வரை, தேசிய அணிக்கு ஆதரவாக நிற்க நேரம் ஒதுக்குவது முதல் வாக்களிக்க நேரம் ஒதுக்குவது வரை உற்சாகத்தையும் தொடர்வோம். நாட்டின் மூலை முடுக்குகளில் உள்ள இளைஞர்கள் தேர்தல் ஜனநாயகத்தில் அதிக எண்ணிக்கையில் பங்கேற்கும் போது, நம் நாட்டின் வளமான எதிர்காலத்தை நாம் காண்போம் என்று கூறினார்.

எம்.பிரபாகரன்

Leave a Reply