பிரதமர் விரைவு சக்தி திட்டத்தின் கீழ், 54 வது நெட்வொர்க் திட்டமிடல் குழு கூட்டம் நான்கு உள்கட்டமைப்பு திட்டங்களை பரிந்துரைத்துள்ளது.

தொழில் மற்றும் உள்நாட்டு வர்த்தக மேம்பாட்டுத் துறையின் (டிபிஐஐடி) லாஜிஸ்டிக்ஸ் சிறப்பு செயலாளர் திருமதி சுமிதா தவ்ரா தலைமையில் 54 வது நெட்வொர்க் திட்டமிடல் குழு (என்பிஜி) கூட்டம் புதுதில்லியில் நேற்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம், ரயில்வே அமைச்சகம், துறைமுகங்கள், கப்பல் மற்றும் நீர்வழி அமைச்சகம், பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகம், மின்சார அமைச்சகம் ஆகியவற்றின் உறுப்புத் துறைகள் மற்றும் அமைச்சகங்கள் தீவிரமாக பங்கேற்றன. கூட்டத்தில், சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகத்தின் இரண்டு திட்டங்கள் மற்றும் ரயில்வே அமைச்சகத்தின் இரண்டு திட்டங்கள் மொத்தம் ரூ.7,693.17 கோடி மதிப்பீட்டில் மதிப்பீடு செய்யப்பட்டன.

திருமதி தவ்ரா, விரைவு சக்தி தேசிய பெருந்திட்ட போர்ட்டலைப் பயன்படுத்துவதன் முக்கியத்துவத்தையும், உள்கட்டமைப்பு திட்டமிடல் மற்றும் செயலாக்கத்திற்கு ‘முழு அரசு’ அணுகுமுறையைப் பின்பற்றுவதன் முக்கியத்துவத்தையும் வலியுறுத்தினார். இப்பகுதியின் பொருளாதார மற்றும் சமூக அனைத்துப் பகுதிகளுடன் இணைப்பதன் அடிப்படையில் திட்டங்களின் முக்கியத்துவத்தையும், பகுதி மேம்பாட்டு அணுகுமுறையைப் பின்பற்றுவதையும் அவர் வலியுறுத்தினார்.

கேரளாவில் பாரத்மாலா பரியோஜனா திட்டத்தின் கீழ் ரூ.4,767.20 கோடி மதிப்பிலான திருவனந்தபுரம் நான்கு வழி வெளிவட்ட சாலையை என்.பி.ஜி ஆய்வு செய்தது. இந்த திட்ட வழித்தடம் மும்பை-கன்னியாகுமரி பொருளாதார வழித்தடத்தின் ஒரு பகுதியாகும். வடக்கு பிராந்தியத்திலிருந்து கிழக்கு பிராந்தியத்திற்கு சீரான மற்றும் விரைவான இணைப்பை வழங்குவதற்கும், பொருளாதாரத்தில் பின்தங்கிய பகுதிகளில் பொருளாதார வளர்ச்சியை அதிகரிப்பதற்கும் இந்தத் திட்டம் அவசியம். இந்தத் திட்டம் பயண நேரத்தை குறைக்கும், வாகன செயல்பாட்டு செலவை மிச்சப்படுத்தும், மேலும் விழிஞத்தில் உள்ள புதிய சர்வதேச கடல் துறைமுகத்திற்கு கடைசி மைல் இணைப்பை வழங்கும்.

ரூ.1,179.33 கோடி திட்ட மதிப்பீட்டில் தஹோத்-போடேலி-வாபி நடைபாதை என்ற மற்றொரு சாலைத் திட்டம் என்.பி.ஜியால் மதிப்பிடப்பட்டது. இந்த திட்ட சாலை புதிய வதோதரா-தில்லி விரைவுச்சாலை சந்திப்பில் தொடங்கி மும்பை-வதோதரா விரைவுச்சாலையில் முடிவடைகிறது. இது போடேலி, தேவாலியா, ராஜ்பிப்லா, நேத்ராங், வியாரா, தரம்பூர், வாபி ஆகியவற்றுடன் ஒரு முக்கியமான இணைப்பை உருவாக்குகிறது மற்றும் வதோதரா-மும்பை விரைவுச்சாலை வழியாக மும்பைக்கு மேலும் தெற்கு நோக்கி செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்தத் திட்டம் சாலை வலையமைப்பை மேம்படுத்தும், பயண நேரம், பயண தூரம் மற்றும் போக்குவரத்து செலவைக் குறைப்பதன் மூலம் உள்ளூர் மக்களுக்கு பயனளிக்கும். இது திட்ட சாலையில் சமூக-பொருளாதார வளர்ச்சி மற்றும் சுற்றுலாவையும் ஊக்குவிக்கும்.

திவாஹர்

Leave a Reply