சிவில் விமானப் போக்குவரத்து மற்றும் எஃகு அமைச்சர் திரு ஜோதிராதித்யா எம் சிந்தியா இன்று (25-08-2023) புதுதில்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், விமான நிலையங்கள் ஆணையத்தின் (ஏஏஐ) கீழ் உள்ள விமான நிலையங்களில் பல்வேறு முனையங்களின் கட்டட பாரம்பரியங்கள் மற்றும் உள்ளூர் கட்டடக்கலை தொடர்பான நூலை வெளியிட்டார். இந்த நூல் 19 விமான நிலையங்களில் முனைய கட்டடங்களின் அமைப்பை எடுத்துக்காட்டுகிறது. இந்த நூல், இனி கட்டப்படும் விமான நிலைய முனைய கட்டடங்களை பாரம்பரிய தன்மையுடன் கட்ட ஊக்குவிப்பதற்கான ஒரு குறிப்பிடத்தக்க முயற்சியாகும். எதிர்கால முனையங்கள் இந்திய கட்டடக்கலை சிறப்பை இணைத்து, நமது பாரம்பரியத் தன்மையை வெளிப்படுத்தும்.
விமான நிலைய முனைய கட்டடம் விமானத்திற்கும் தரைவழிப் போக்குவரத்திற்கும் இடையிலான தடையற்ற தொடர்பை ஒழுங்குபடுத்துகிறது. இது விமான பயணத்துடன் தொடர்புடைய பல்வேறு சேவைகளுக்கான இணைப்பாக செயல்படுகிறது. ஒரு முனையம் ஒரு நகரத்தைப் பற்றிய பார்வையாளர்களின் ஆரம்ப எண்ணங்களை உருவாக்கும் நுழைவாயிலாக மாறுகிறது. அவை இனி வசதிக்கான எளிய கட்டமைப்புகள் மட்டுமாக அல்லாமல், அவை நகரத்தின் அடையாளங்களாகவும், அதிசயங்களாகவும் பார்க்கப்பட வேண்டும் என்ற நோக்கில் இப்போது முனையங்கள் கட்டப்படுகின்றன. அவை நகரத்திற்கு வருபவர்களை வரவேற்பதுடன் பயணிகளிடையே பிரமிப்பையும் ஆச்சரியத்தையும் தூண்டுகின்றன.
பிரதமர் திரு. நரேந்திர மோடி இந்தியாவின் வளமான சமூக மற்றும் கலாச்சார பன்முகத்தன்மையின் பாரம்பரியத்தை வெளிப்படுத்துவதற்கான தொலைநோக்கு பார்வையைக் கொண்டுள்ளார். மேலும் இந்தியாவின் கலாச்சார பாரம்பரியத்தை ஊக்குவிப்பதிலும், அதை உலக அளவில் கொண்டு செல்வதற்கும் தமது தீவிர முயற்சிகள் அவர் குறிப்பிடத்தக்க பங்கை பிரதமர் ஆற்றி வருகிறார். அவரைப் பின்பற்றி, சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் திரு ஜோதிராதித்யா எம்.சிந்தியா, தற்போதுள்ள மற்றும் இனி அமைக்கப்படும் முனைய கட்டடங்களில் இந்திய கட்டடக்கலையை ஒருங்கிணைத்து, இந்திய பாரம்பரியத்தின் பெருமையை எடுத்துச் சொல்லத் திட்டமிட்டுள்ளார். இந்த முனைய கட்டடங்கள் பாரம்பரிய உணர்வால் நிரம்பியுள்ளதுடன் தேசத்தின் அடையாள வெளிப்பாடுகளாகவும் அமைகின்றன.
எம்.பிரபாகரன்