இரயில் பயணிகள், இரயில்வே கோட்பாடுகளை கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும்!- தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே‌.வாசன் வலியுறுத்தல்.

மதுரை இரயில் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இரயில் பெட்டியில் தீ விபத்து ஏற்பட்டு 10 பேர் தீயில் கருகி இறந்தனர் என்ற செய்தி அறிந்து மிகவும் அதிர்ச்சி அடைந்தேன்.

உத்திரபிரதேச மாநிலம் லக்னோவில் இருந்து ஆன்மீகப் பயணமாக தமிழ் நாட்டிற்கு வந்த இரயில் பெட்டி மதுரை இரயில் நிலையத்தில் நிறுத்தி வைக்கிப்பட்டிருந்து. அதில் பயணம் செய்த பயணிகள் சமையல் செய்வதற்காக கொண்டு வரப்பட்ட கேஸ் சிலிண்டர் பற்றவைக்கும் போது சிலிண்டர் வெடித்து ஏற்பட்ட தீபத்தில் 10 இறந்ததாக வரும் தகவல் அதிர்ச்சியாக உள்ளது.

இரயிலில் எளிதாக தீப்பிடிக்கும் சாதனங்களை கொண்டு செல்ல கூடாது என்ற கோட்பாடுகள் இருக்கும் போது, கேஸ் சிலிண்டர் கொண்டு சென்றதே விபத்துக்கு காரணம் என்று தெரியவருகிறது. இதனால் கேஸ் சிலிண்டர் எடுத்துசெல்வர் மட்டுமல்ல சக பயணிகளும் பாதிக்கபடுவார்கள். இரயிலில் பயணம் செய்யும் பயணிகள், இரயில்வே கோட்பாடுகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும்.

இரயில்வேதுறை, வருங்காலங்களில் இரயில் பயணிகள், இரயில்வே கோட்பாடுகளை கடைப்பிடிக்கிறார்களா என்று தொடர் கண்காணிப்பில் ஈடுபடவேண்டும். தொலைதூரப் பயணம் மற்றும் ஆன்மீகப் பயணம் மேற்கொள்பவர்கள் கேஸ் சிலிண்டர் எடுத்து செல்ல அனுமதிக்கவே கூடாது.

உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு உயர்ந்தபட்ச நிதியுதவியை இரயில்வேதுறை அளிக்க வேண்டும். அவர்களது குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் தமிழ் மாநில காங்கிரஸ் சார்பாக ஆழந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்.

தீ விபத்தில் காயமடைந்த பயணிகளுக்கு தமிழக அரசு உயர் சிகிச்சை அளிக்க வேண்டும். சிகிச்சை பெற்றுவருபவர்கள் பூரண நலம் பெற்று வீடு திரும்ப வேண்டும் எற்று எல்லாம் வல்ல இறைவனிடம் வேண்டுகிறேன்.

இவ்வாறு தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் தமது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

சி.கார்த்திகேயன்

Leave a Reply