பஞ்சாயத்து ராஜ் அமைச்சகத்தின் ஸ்வமித்வா திட்டம் 2023 மின் ஆளுமைக்கான தேசிய விருதை வென்றது.

பஞ்சாயத்து ராஜ் அமைச்சகத்தின் ஸ்வமித்வா (கிராமங்களின் கணக்கெடுப்பு மற்றும் கிராமப் பகுதிகளில் மேம்பட்ட தொழில்நுட்பத்துடன் வரைபடம்) திட்டம் குடிமக்களை மையமாகக் கொண்ட சேவைகளை வழங்குவதற்கான வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துவதற்கான மின் ஆளுமை 2023 க்கான தேசிய விருதை வென்றது.

இது ஸ்வமித்வா குழுவினரால் மேற்கொள்ளப்பட்ட சிறந்த மற்றும் முன்மாதிரியான பணிகளுக்கான அங்கீகாரமாகும். தொழில்நுட்பம் மிக வேகமாக வளர்ந்து வருகிறது. நிர்வாக சீர்திருத்தங்களுடன் தொழில்நுட்பத்தை ஒருங்கிணைப்பதற்கான முன்முயற்சிகள் முடிவுகளைத் தரத் தொடங்கியுள்ளன. மேலும் ஸ்வாமித்வா திட்டத்தின் கீழ் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவது குடிமக்களை மையமாகக் கொண்ட நிர்வாகத்தை நோக்கி பெரிதும் உதவியது மற்றும் கிராமப்புற இந்தியாவை  தற்சார்பு கொண்டதாக  மாற்றுவதற்கான விரிவான கிராம திட்டமிடலுக்கு உதவியது.

திறம்பட செயல்படுத்துவதன் மூலம், ஸ்வமித்வா திட்டம் கிராமப்புற இந்தியாவுக்கு ஒருங்கிணைந்த சொத்து சரிபார்ப்பு தீர்வை வழங்குவதிலும், கிராமப்புறங்களில் வாழும் மக்களின் நிதி ஸ்திரத்தன்மையை மேம்படுத்துவதிலும், கிராமப்புற இந்தியாவின் வாழ்க்கையை மாற்றுவதிலும் வெற்றி கண்டுள்ளது.

எஸ்.சதிஸ் சர்மா

Leave a Reply