“மக்கள் உயிர்காக்கும் பணியில் ஈடுபடும் அரசு மருத்துவர்களின் குடும்பம் காக்க தமிழக அரசு அவர்களின் நியாயனமான கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும்!-தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே‌.வாசன் வலியுறுத்தல்.

உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டபோது தங்கள் உயிரைப் பற்றி கவலைப்படாமல் சிறப்பாக பணியாற்றிவர்கள் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள். மக்களை காக்கும் பணியில் பலர் தங்கள் இன்னுயிரையும் ஈந்தது எக்காலத்திலும் மறக்க முடியாது.

சுகாதாரத்துறையில் தமிழகம் பல்வேறு மாநிலங்களுக்கு முன்மாதிரியாக, செயல்படுகிறது என்பதில் ஐயமில்லை. இருந்தபொழுதும் மக்களின் உயிர்காக்கும் பணியில் ஈடுபடும் மருத்துவர்களின் ஊதியம் மற்ற மாநிலத்தைவிட தமிழக்த்தில் குறைவாக அளிக்கபடுவது வருத்தம் அளிக்கிறது.

கடந்த காலங்களில் அரசு மருத்துவர்கள் ஊதியம் உயர்விற்காக போராட்டம் நடத்திய போது தற்போதைய தமிழக முதல்வர் அவர்கள், அப்போராட்டத்தில் கலந்துகொண்டு திமுக ஆட்சிக்கு வந்தவுடன் தங்கள் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என்று வாக்களித்தார். ஆனால் ஆட்சிக்கு வந்து இரண்டு வருடத்திற்குமேல ஆகியும் எந்த நடவடிக்கையும் எடுக்காதது மருத்துவர்கள் மனதில் நீங்காத ரனமாக உள்ளது.

கொரோனா காலக்கட்டத்தில் தமிகத்தில் உயிரிழந்த அரசு மருத்துவர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு வேலை வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் இதுவரை வேலை அளிக்காமல் காலம் தாழ்த்துவது, உயிரிழந்த மருத்துவர்களின் குடும்பத்திற்கு மிகுந்த மன உளைச்சலையும், வருத்தத்தையும் தருகிறது.

அரசானை 354 -ஐ உடனடியாக அமல்படுத்தி உயிரிழந்த அரசு மருத்தவர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு வேலையும், மாநில அரசின் நிவாரணத் தொகையையும் வழங்க வேண்டும் என்று அரசு மருத்துவர்களுக்கான சட்டப் போராட்டக்குழு சார்பாக கோரிக்கை வைக்கப்பட்டது.

மக்களின் உயிர் காக்கும் பணியில் ஈடுபடும் அரசு மருத்துவர்களின் குடும்பம் காக்கப்பட அவர்களின் நியாயமான கோரிக்கைகளை தமிழக அரசும், தமிழக சுகாதாரத்துறையும் நிறைவேற்ற வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் தமது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

சி.கார்த்திகேயன்

Leave a Reply