பிரதமரின் மக்கள் வங்கிக் கணக்குத் திட்டம் – நிதி சேர்க்கைக்கான தேசிய இயக்கம் – வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டு இன்றுடன் ஒன்பது ஆண்டுகள் நிறைவடைகிறது.
பிரதமர் திரு. நரேந்திர மோடி 15 ஆகஸ்ட் 2014 அன்று தனது சுதந்திர தின உரையில் இத்திட்டத்தை அறிவித்தார். 28 ஆகஸ்ட் 2014 அன்று இந்த திட்டத்தைத் தொடங்கி வைத்த பிரதமர், இந்த நிகழ்வை ஒரு தீய சுழற்சியில் இருந்து ஏழைகள் விடுதலை பெற்றதைக் கொண்டாடும் விழா என்று விவரித்தார்.
உலகின் மிகப்பெரிய நிதி சேர்க்கை முன்முயற்சிகளில் ஒன்றாக, நிதி அமைச்சகம், அதன் நிதி சேர்க்கை தலைமையிலான தலையீடுகள் மூலம் விளிம்புநிலை மற்றும் பொருளாதார ரீதியாக பின்தங்கிய பிரிவினருக்கு நிதி உள்ளடக்கம் மற்றும் ஆதரவை வழங்க தொடர்ந்து முயற்சிக்கிறது. நிதிச் சேர்க்கை சமமான மற்றும் உள்ளடக்கிய வளர்ச்சியை ஊக்குவிக்கிறது, அத்துடன் அடிப்படை வங்கி சேவைகளை அணுக முடியாத குறைந்த வருவாய் குழுக்கள் மற்றும் பலவீனமான பிரிவினர் போன்ற பாதிக்கப்படக்கூடிய குழுக்களுக்கு குறைவான விலையில் நிதி சேவைகளை வழங்குகிறது.
நிதி சேர்க்கை ஏழைகளின் சேமிப்பை முறையான நிதி அமைப்பில் கொண்டு வருகிறது மற்றும் கிராமங்களில் உள்ள அவர்களின் குடும்பங்களுக்கு பணத்தை அனுப்புவதற்கான வழியை வழங்குகிறது, மேலும் கந்து வட்டிக்காரர்களின் பிடியில் இருந்து அவர்களை விடுவிக்கிறது.
பிரதமரின் மக்கள் வங்கிக் கணக்குத்திட்டத்தின் 9-வது ஆண்டு நிறைவையொட்டி, மத்திய நிதியமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன் வெளியிட்டுள்ள செய்தியில், பிரதமரின் மக்கள் வங்கிக் கணக்குத் திட்டத்தின் செயல்பாடுகள், டிஜிட்டல் மாற்றம், ஆகியவற்றின் 9 ஆண்டுகள் இந்தியாவில் நிதி சேர்க்கையில் புரட்சியை ஏற்படுத்தியுள்ளதாக் கூறியுள்ளார். வங்கிக் கணக்குகளைத் திறப்பதன் மூலம் 50 கோடிக்கும் அதிகமான மக்கள் முறையான வங்கி அமைப்புக்குள் கொண்டு வரப்பட்டுள்ளனர். இந்த கணக்குகளில், சுமார் 55.5% பெண்களுக்கு சொந்தமானவை, மேலும் 67% கிராமப்புற மற்றும் சிறிய நகர்ப்புறங்களில் திறக்கப்பட்டுள்ளன. இந்த கணக்குகளில் மொத்த வைப்புத்தொகை ரூ. 2 லட்சம் கோடியைத் தாண்டியுள்ளது. மேலும், சுமார் 34 கோடி ரூபே கார்டுகள் இந்த கணக்குகளுக்கு கட்டணமின்றி வழங்கப்பட்டுள்ளன, இது ரூ .2 லட்சம் விபத்து காப்பீட்டையும் வழங்குகிறது.
“பங்குதாரர்கள், வங்கிகள், காப்பீட்டு நிறுவனங்கள் மற்றும் அரசு அதிகாரிகளின் கூட்டு முயற்சிகளுடன், பிரதமரின் வங்கிக் கணக்குத் திட்டம் ஒரு முக்கிய முன்முயற்சியாக நிற்கிறது. இது பிரதமர் திரு நரேந்திர மோடியின் கனவுப்படி நாட்டில் நிதி சேர்க்கை முறையை மாற்றுகிறது” என்று நிர்மலா சீதாராமன் கூறினார்.
திவாஹர்