பிரதமர் மோடி அவர்களின் தலைமையில் நடைப்பெற்ற அமைச்சரவை கூட்டதில் வீட்டு உபயோகத்திற்கான கேஸ் சிலிண்டரின் விலை ரூ.200 குறைப்பதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டு இருக்கிறது. இந்த அறிவிப்பு ஏழை, எளிய மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
கடந்த 2016ஆண்டு, மே 1-ஆம் தேதி பிரதமர் மோடி அவர்களால் துவங்கி வைக்கப்பட்ட உஜ்வாலா திட்டத்தில் ஏழை, எளிய மக்களுக்கு 5 கோடி கேஸ் இணைப்புகள் வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது
இந்த உஜ்வாலா திட்டத்தில் அளிக்கப்பட்ட அளிக்கப்பட்ட கேஸ் இணைப்பிற்கு கூடுதலாக ரூ.400 மான்யம் அளிப்பதாக மத்திய அரசு அறிவித்துள்ளது, மிகவும் வரவேற்கதக்கது. இந்த அறிவிப்பு ஏழை, எளிய மக்களுக்கு மிகுந்த சந்தோசத்தை அளித்துள்ளது. தமிழ் மாநில காங்கிரஸ் சார்பாக பிரதமர் மோடி அவர்களுக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.
இவ்வாறு தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் தமது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
சி.கார்த்திகேயன்