மகேந்திரகிரி தொடரின் கடைசி கப்பல் செப்டம்பர் 1-ம் தேதி தொடங்கிவைக்கப்படுகிறது.

மகேந்திரகிரி தொடரின் கடைசி புராஜெக்ட் 17 ஏ ஃபிரிகேட், 01 செப்டம்பர் 23 அன்று மும்பையில் உள்ள  மசகான் டாக் ஷிப் பில்டர்ஸ் நிறுவனத்தில் குடியரசு துணைத்தலைவர்  திரு ஜக்தீப் தன்கரின் மனைவி டாக்டர் (திருமதி) சுதேஷ் தன்கரால் தொடங்கி வைக்கப்படுகிறது.

ஒடிசா மாநிலத்தில் அமைந்துள்ள கிழக்குத் தொடர்ச்சி மலையில் உள்ள ஒரு மலைச் சிகரத்தின் பெயரால் அழைக்கப்படும் மகேந்திரகிரி, புராஜெக்ட் 17ஏ போர்க்கப்பலின் ஏழாவது கப்பலாகும். இந்த போர்க்கப்பல்கள் மேம்பட்ட  அம்சங்கள், மேம்பட்ட ஆயுதங்கள், சென்சார்கள் மற்றும் இயங்குதள மேலாண்மை அமைப்புகளுடன் புராஜெக்ட் 17 கிளாஸ் ஃபிரிகேட்ஸ் (ஷிவாலிக் கிளாஸ்) இன் தொடர்ச்சியாகும். புதிதாக பெயரிடப்பட்ட மகேந்திரகிரி ஒரு தொழில்நுட்ப ரீதியாக மேம்பட்ட போர்க்கப்பல். அதன் வளமான கடற்படை பாரம்பரியத்தை தழுவுவதற்கான இந்தியாவின் உறுதிப்பாட்டின் அடையாளமாக நிற்கிறது, அதே நேரத்தில் உள்நாட்டு பாதுகாப்புத் திறன்களின் எதிர்காலத்தை நோக்கி தன்னை நகர்த்துகிறது.

இத்திட்டத்தின் கீழ், மசகான் நிறுவனம் மூலம்  மொத்தம் நான்கு கப்பல்களும், ஜிஆர்எஸ்இ மூலம் மூன்று கப்பல்களும் கட்டப்பட்டு வருகின்றன. இந்தத் திட்டத்தின் முதல் ஆறு கப்பல்கள் 2019-2023 க்கு இடையில் எம்.டி.எல் & ஜி.ஆர்.எஸ்.இ ஆல் இதுவரை தொடங்கப்பட்டுள்ளன.

புராஜெக்ட் 17ஏ கப்பல்கள் அனைத்து போர்க்கப்பல் வடிவமைப்பு நடவடிக்கைகளுக்கான முன்னோடி அமைப்பான இந்திய கடற்படையின் போர்க்கப்பல் வடிவமைப்பு பணியகத்தால் உள்நாட்டில் வடிவமைக்கப்பட்டுள்ளன.  நாட்டின் உறுதியான உறுதிப்பாட்டுடன், புராஜெக்ட் 17 ஏ கப்பல்களின் உபகரணங்கள் மற்றும் அமைப்புகளுக்கான ஆர்டர்களில் கணிசமான 75% குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் (எம்.எஸ்.எம்.இ) உள்ளிட்ட உள்நாட்டு நிறுவனங்களுக்கு ஆர்டர் செய்யப்பட்டுள்ளது. தற்சார்பு கடற்படையை கட்டியெழுப்புவதில் நமது தேசம் அடைந்துள்ள நம்பமுடியாத முன்னேற்றத்திற்கு மகேந்திரகிரி பொருத்தமான சான்றாகும்.

எம்.பிரபாகரன்

Leave a Reply