லடாக்கில், தேசிய நெடுஞ்சாலை 301-ல் உள்ள கார்கில்-சன்ஸ்கர் இடைநிலை பாதை மேம்படுத்தப்பட்டு வருவதாக மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் திரு நிதின் கட்கரி தெரிவித்தார்.
இது குறித்து சமூக ஊடக எக்ஸ் பகுதியில் குறிப்பிட்டுள்ள அவர், இந்தத் திட்டத்தின் மொத்த நீளம் 31.14 கிலோமீட்டர் என்றும், இது 6வது தொகுப்பின் கீழ் வருகிறது என்றும் அவர் தெரிவித்தார். மண்டலத்திற்குள் பயணிகளுக்கும், சரக்கு போக்குவரத்திற்கும் நம்பகமான மற்றும் அணுகக்கூடிய இணைப்பை வழங்குவதன் மூலம் இப்பகுதியில் பொருளாதார வளர்ச்சியை அதிகரிப்பதே இந்த முயற்சியின் முக்கிய நோக்கம் என்று அவர் கூறினார்.
மேம்படுத்தப்பட்ட நெடுஞ்சாலை ஆண்டு முழுவதும் பயன்படுத்தப்படுவதை உறுதி செய்யும். இது உள்ளூர் பொருளாதாரம் மற்றும் இப்பகுதியில் வசிப்பவர்களுக்கு பெரிதும் பயனளிக்கும் என்று மத்திய அமைச்சர் கூறினார்.
பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்களின் தலைமையின் கீழ், இந்த லட்சியத் திட்டம், லடாக் பிராந்தியத்தில் விரைவான, தடையில்லாத மற்றும் சுற்றுச்சூழலுக்கேற்ற வகையில் அர்ப்பணிக்கப்பட்டுள்ளது என்று அவர் கூறினார்.
திவாஹர்