பிரதமர் நரேந்திர மோதி தலைமையிலான மத்திய அரசு மருத்துவக் கல்வியை குறைந்த செலவு கொண்டதாகவும் எளிதில் கிடைக்க கூடியதாகவும் மாற்றுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது: மத்திய இணை அமைச்சர் ஜிதேந்திர சிங்.

பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான அரசு மருத்துவக் கல்வியை செலவு குறைந்ததாகவும் எளிதில் கிடைக்க கூடியதாகவும் மாற்றுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது என மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை இணையமைச்சர் திரு ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார்.   எந்தவொரு தகுதியான நபரும் சமூக பொருளாதார நிலை காரணமாக பின்னடைவை சந்திக்கக்கூடாது என்பதே அரசின் நோக்கம் என்றும் அவர் தெரிவித்தார்.

இந்தியாவின் மிக மதிப்புமிக்க நிறுவனங்களில் ஒன்றான சென்னை ஸ்டான்லி மருத்துவக் கல்லூரியில் நடைபெற்ற கல்வி மாநாட்டில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு டாக்டர் ஜிதேந்திர சிங் பேசுகையில், மருத்துவக் கல்வி இந்த அரசின் முன்னுரிமைகளில் ஒன்றாகும் என கூறினார். கடந்த 9 ஆண்டுகளுக்கு முன்பு வெறும் 145 அரசு மருத்துவக் கல்லூரிகள் மட்டுமே இருந்த நிலையில் இப்போது அது 260 ஆக உயர்ந்துள்ளது என அவர் தெரிவித்தார். புதிய எய்ம்ஸ் அமைப்பதற்கான மத்திய அரசின் திட்டத்தின் கீழ், 22 எய்ம்ஸ் மருத்துவமனைகளுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது எனவும் 19 எய்ம்ஸ்களில் இளங்கலை படிப்புகள் தொடங்கப்பட்டுள்ளன என்றும் அவர் குறிப்பிட்டார்.

2014 ஆம் ஆண்டில் 51,348 ஆக இருந்த எம்பிபிஎஸ் இளநிலை இடங்களின் எண்ணிக்கை இப்போது 91,927 இடங்களாக அதிகரித்துள்ளது எனவும் இது 79 சதவீத உயர்வு என்றும் அமைச்சர் கூறினார். முதுநிலை படிப்பு இடங்களின் எண்ணிக்கை 2014 ஆம் ஆண்டில் 31,185 இடங்களிலிருந்து தற்போது 93 சதவீதம் அதிகரித்து 60,202 இடங்களாக உயர்ந்துள்ளது என்று அவர் கூறினார்.

இந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம், குஜராத்தி மற்றும் பெங்காலி போன்ற பிராந்திய இந்திய மொழிகளில் மருத்துவம் மற்றும் பொறியியல் கல்வியை வழங்க பிரதமர் திரு நரேந்திர மோடி வலியுறுத்தி வருவதை திரு ஜிதேந்திர சிங் நினைவு கூர்ந்தார்.

எஸ்.சதிஸ் சர்மா

Leave a Reply