பங்களாதேஷ் அரசு ஊழியர்களின் 67 மற்றும் 68 வது பிரிவினர் நல்லாட்சிக்கான தேசிய மையத்தில் பயிற்சியை நிறைவு செய்துள்ளனர்.

வெளியுறவு அமைச்சகத்துடன் இணைந்து, நல்லாட்சிக்கான தேசிய மையம் (என்.சி.ஜி.ஜி) ஏற்பாடு செய்த பங்களாதேஷின் சிவில் ஊழியர்களுக்கான 2 வார பயிற்சித் திட்டத்தில் அந்நாட்டைச் சேர்ந்த 67 மற்றும் 68வது தொகுதி ஊழியர்கள் பயிற்சி பெற்றனர்.

இந்த திறன் மேம்பாட்டு திட்டம் (சிபிபி),  2023 செப்டம்பர் 1 அன்று நிறைவடைந்தது. 1,500 சிவில் ஊழியர்களுக்கான சிபிபி-யின் முதல் கட்டப் பயிற்சி நிறைவடைந்ததைத் தொடர்ந்து, 2025-ம் ஆண்டுக்குள் கூடுதலாக 1,800 சிவில் ஊழியர்களின் திறன்களை மேம்படுத்த பங்களாதேஷ் அரசுடன் என்.சி.ஜி.ஜி ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது.

பங்களாதேஷின் 855 அதிகாரிகளுக்கு என்.சி.ஜி.ஜி ஏற்கனவே பயிற்சி அளித்துள்ளது. நல்லாட்சிக்கான தேசிய மையத்தை (என்.சி.ஜி.ஜி) ‘கவனம் பெற்ற நிறுவனம்’ என்று வெளியுறவு அமைச்சகம் (எம்.இ.ஏ) அடையாளம் கண்டுள்ளது. இதன் விளைவாக, என்.சி.ஜி.ஜி அதன் நடவடிக்கைகளை கணிசமாக விரிவுபடுத்தி வருகிறது.

என்.சி.ஜி.ஜி தலைமை இயக்குநர் திரு வி. ஸ்ரீனிவாஸ் நிறைவு அமர்வுக்கு தலைமை தாங்கினார். திரு வி. ஸ்ரீனிவாஸ் தமது நிறைவுரையில், மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று வலியுறுத்தினார். மேலும் பொதுமக்களின் குறைகளை குறிப்பிட்ட காலத்திற்குள் நிவர்த்தி செய்ய வேண்டியதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார்.

திவாஹர்

Leave a Reply