ஏப்ரல் 1, 2023 முதல் ஆகஸ்ட் 31, 2023 வரை ரயில்வே 634.66 மெட்ரிக் டன் சரக்குகளை கையாண்டுள்ளது – இது கடந்த ஆண்டின் இதே காலத்தை விட 13.78 மெட்ரிக் டன் அதிகமாகும்: மொத்தம் ரூ. 1 லட்சம் கோடி வருவாயை ரயில்வே ஈட்டியுள்ளது.

சரக்கு ஏற்றுதலைப் பொறுத்தவரை, ரயில்வே 2023 ஏப்ரல் 1 முதல் 2023 ஆகஸ்ட் 31 வரை 634.66 மெட்ரிக் டன்களை கையாண்டுள்ளது.  கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தில் 620.88 மெட்ரிக் டன் சரக்குகளை ரயில்வே கொண்டு சென்றுள்ளது. வருவாயைப் பொறுத்தவரை இந்த நிதி ஆண்டில் சுமார் ரூ. 1 லட்சம் கோடி வருவாயை ரயில்வே ஈட்டியுள்ளது. இதில் சரக்கு பிரிவு, பயணிகள் பிரிவு மற்றும் பிற முக்கிய வருவாய்கள் அடங்கும்.

கடந்த நிதி ஆண்டின் இதே காலகட்டத்துடன் (ஏப்ரல் – ஆகஸ்ட்) ஒப்பிடுகையில் முக்கிய சரக்குகள் ஏற்றிச் செல்லுதல் அதிகரிப்பு குறித்த விவரங்கள்:

•          இந்த ஆண்டு ஏற்றிச் செல்லப்பட்ட இரும்புத் தாது 70.84 மெட்ரிக் டன் ஆகும். இது கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தில் 61.30 மெட்ரிக் டன்னாக இருந்தது.  இந்த ஆண்டு 15.56% அதிகமாகும்.

•          எஃகு கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தில் 26.16 மெட்ரிக் டன்னாக இருந்த நிலையில் இந்த ஆண்டு 28.42 மெட்ரிக் டன் ஏற்றிச் செல்லப்பட்டுள்ளது. இது 8.63% வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது.

•          உரம்  கடந்த ஆண்டு 22.25 மெட்ரிக் டன் ஏற்றிச் செல்லப்பட்ட நிலையில் இந்த ஆண்டு –  24.13 மெட்ரிக் டன் கையாளப்பட்டுள்ளது. இது 8.45% வளர்ச்சியைக் காட்டுகிறது.

•          கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தில் நிலக்கரி 305.39 மெட்ரிக் டன்னும் இந்த ஆண்டு 311.53 மெட்ரிக் டன்னும் ரயில் மூலம் கொண்டு செல்லப்பட்டுள்ளது.

•          ரயில் மூலம் வாகனங்கள் கொண்டு செல்லப்படுவது 26% வளர்ச்சியையும், அதன் மூலம் கிடைக்கும் வருவாய் 24.5% வளர்ச்சியையும் எட்டியுள்ளது.

திவாஹர்

Leave a Reply