புதுதில்லியில் நடைபெறும்18 வது ஜி 20 உச்சி மாநாட்டின் முக்கிய ஈர்ப்பு டிஜிட்டல் இந்தியா அனுபவ மண்டலம்.

ஒரு வரலாற்று முன்னெடுப்பில், இந்தியாவின் தலைமையின் கீழ், எதிர்கால டிஜிட்டல் பொது உள்கட்டமைப்பை (டிபிஐ) எவ்வாறு திறம்பட வடிவமைப்பது என்பது குறித்து ஜி 20 ஒருமித்த கருத்தை எட்டியது.

இலகுவான வாழ்க்கைக்காக டிஜிட்டல் பொது உள்கட்டமைப்பின் மகிழ்ச்சியான பயன்பாட்டை பிரதிநிதிகள் அனுபவிக்கலாம்.

டிஜிட்டல் பொது உள்கட்டமைப்புகளான  ஆதார், (யுபிஐ) ஒருங்கிணைந்த கட்டண இடைமுகம், டிஜிலாக்கர், டிக்ஷா, பாஷினி, ஓ.என்.டி.சி, இ-சஞ்சீவனி போன்றவை ஒட்டுமொத்த சமூகத்தின் மீதான தாக்கத்தை நிரூபிக்கும்.

டிஜிட்டல் மாற்றத்தின் வெற்றிகளை வெளிப்படுத்தும் டிஜிட்டல் இந்தியா பயணம்.

அமைச்சர்கள், மூத்த அதிகாரிகள் மற்றும் சிவில் சமூகங்களிடையே ஆண்டு முழுவதும் நடைபெற்ற அனைத்து ஜி 20 செயல்முறைகள் மற்றும் கூட்டங்களின் உச்சமாக 18வது ஜி 20 அரசுத் தலைவர்கள் மற்றும் அரசாங்கத் தலைவர்கள் உச்சிமாநாட்டை நடத்த புதுதில்லி தயாராக உள்ளது. புது தில்லி உச்சிமாநாட்டின் முடிவில் ஜி 20 தலைவர்களின் பிரகடனம் ஏற்றுக்கொள்ளப்படும், இது அந்தந்த அமைச்சர்கள் மற்றும் பணிக்குழு கூட்டங்களில் விவாதிக்கப்பட்ட மற்றும் ஒப்புக்கொள்ளப்பட்ட முன்னுரிமைகள் குறித்த தலைவர்களின் உறுதிப்பாட்டைக் குறிப்பதாக இருக்கும். ஜி-20 மாநாடு செப்டம்பர் 9-ம் தேதி முதல் 10-ம் தேதி வரை தில்லி பிரகதி மைதானத்தில் நடைபெறுகிறது.

ஜி20 டிஜிட்டல் பொருளாதார பணிக்குழுவின் (டி.இ.டபிள்யூ.ஜி) கூட்டங்களை மத்திய அரசின் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் சார்பில் லக்னோ, ஹைதராபாத், புனே மற்றும் பெங்களூருவில் வெற்றிகரமாக நடைபெற்றது. 

திவாஹர்

Leave a Reply