மத்திய பிரதேச மாநிலம் போபாலில் மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்றம் மற்றும் தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை அமைச்சர் திரு பூபேந்தர் யாதவ் தூய்மைக்காற்று ஆய்வு 2023 விருதுகளை இன்று அறிவித்தார். ஒன்றாவது பிரிவில் (மில்லியனுக்கும் அதிகமான மக்கள் தொகை) இந்தூர் முதலிடத்தையும், ஆக்ரா மற்றும் தானே அதற்கு அடுத்தடுத்த் இடத்தில் உள்ளன. இரண்டாவது பிரிவில் (3-10 லட்சம் மக்கள் தொகை) அமராவதி முதல் இடத்தையும், மொராதாபாத் மற்றும் குண்டூர் அதற்கு அடுத்தடுத்த இடத்தையும் பிடித்துள்ளன. இதேபோல், மூன்றாம் பிரிவில் (3 லட்சத்துக்கும் குறைவான மக்கள் தொகை) பர்வனூ முதலிடத்தையும், காலா ஆம்ப் மற்றும் அங்குல் அதற்கு அடுத்தடுத்த இடத்தையும் பிடித்தன. இந்த நிகழ்ச்சியில் மத்தியப்பிரதேச முதலமைச்சர் திரு சிவராஜ் சிங் சவுகான் கலந்து கொண்டார்.
இந்நிகழ்ச்சியில் பேசிய திரு யாதவ், இந்த ஆண்டு, நீல வானத்திற்கான தூய்மை காற்று 4வது சர்வதேச தினம் (தூய்மை வாயு தினம் 2023) வலுவான கூட்டாண்மைகளை உருவாக்குவது, முதலீட்டை அதிகரிப்பது மற்றும் காற்று மாசுபாட்டை தவிர்ப்பதற்கான பொறுப்பை பகிர்ந்து கொள்வது, “தூய்மையான காற்றுக்காக ஒன்றிணைவோம்” என்ற உலகளாவிய கருப்பொருளுடன் அமைந்துள்ளது.
2020 ஆகஸ்ட் 15 அன்று, பிரதமர் திரு நரேந்திர மோடி, நாட்டின் அனைத்து மக்களுக்கும் சுத்தமான காற்றை உறுதி செய்வதற்கான அரசின் உறுதிப்பாட்டை வெளிப்படுத்தி, அவர்களுக்கு ஆரோக்கியமான மற்றும் ஆக்கப்பூர்வமான வாழ்க்கை முறையை உறுதி செய்தார் என்று அவர் கூறினார். முழுமையான அணுகுமுறை மூலம் 100 க்கும் மேற்பட்ட நகரங்களில் காற்றின் தரத்தை மேம்படுத்துவதற்கான நோக்கத்தையும் திட்டத்தையும் அறிவித்தார் என்று அவர் குறிப்பிட்டார்.
இத்திட்டத்தின் கீழ் நகரம் சார்ந்த செயல்திட்டங்களை செயல்படுத்த 131 நகரங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன என்று திரு யாதவ் கூறினார். இந்த திட்டங்களை ஒருங்கிணைந்து செயல்படுத்துவதன் மூலம் 131 நகரங்களில், நாடு முழுவதிலும் காற்றின் தரத்தை மேம்படுத்த உதவும் என்று அவர் மேலும் கூறினார்.
எம்.பிரபாகரன்