தமிழக அரசுடன், போக்குவரத்து தொழிற்சங்கங்கள் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதைத் தொடர்ந்து, போக்குவரத்து தொழிலாளர்கள், தங்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தை திரும்பப் பெற்றுள்ளனர்.
தொழிலாளர்களின் நலன் கருதி, போக்குவரத்து துறை ஊழியர்களுக்கு 7 சதவீதம் அகவிலைப்படி உயர்வை, தமிழக அரசு அறிவித்துள்ளது.
இந்நிலையில், தொ.மு.ச. உள்ளிட்ட தொழிற்சங்கங்களின் வேலைநிறுத்தத்தை முடிவுக்கு கொண்டுவரும் வகையில், தமிழக அரசு, தொழிற்சங்கங்களுடன் இன்று பேச்சுவார்தை நடத்தியது.
சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற இந்த பேச்சுவார்த்தையில், சுமூக உடன்பாடு ஏற்பட்டது. இதனையடுத்து, வேலைநிறுத்தத்தை திரும்பப் பெறுவதாக தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன.
பேச்சுவார்த்தை தொடர்பாக கடிதம் அளிப்பதில் தி.மு.க.வின் தொ.மு.ச. ஏற்படுத்திய காலதாமதம்தான், பேச்சுவார்த்தையில் முட்டுக்கட்டை ஏற்பட்டதாக சி.ஐ.டி.யூ. தொழிற்சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.
-சி.மகேந்திரன்.