திருச்சி என்.ஐ.டி-யின், வருடாந்திர மாரத்தான் போட்டியில், 2500க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்பு.

திருச்சி தேசிய தொழில்நுட்பக் கழகத்தின் (என்.ஐ.டி) வருடாந்திர விளையாட்டு நிகழ்ச்சியான ஸ்போர்ட்ஸ் ஃபெட் 2023 இன் முதன்மை நிகழ்வான மாரத்தான் போட்டியை, நிறுவனத்தின் விளையாட்டுக் குழுவும்,  முன்னாள் மாணவர்கள் சங்கமும் இணைந்து செப்டம்பர் 8, 2023 அன்று நடத்தின. நிறுவனத்தின் வைரவிழா ஆண்டு கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக இந்த நிகழ்ச்சி நடைபெற்றது.

புகழ்பெற்ற 10 கி.மீ ஓட்டம், ஆண்டுதோறும் நடைபெறும் மிகப்பெரிய நிகழ்வுகளில் ஒன்றாக மாறியுள்ளது. மாரத்தானில் பல்வேறு துறைகளைச் சேர்ந்த 2500-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.

சிறப்பு விருந்தினரான திருச்சி மாநகர காவல்துறை உதவி ஆணையர் திரு வி. சுரேஷ்குமார், மாரத்தான் ஓட்டத்தை கொடியசைத்துத் தொடங்கி வைத்தார். திருச்சி என்.ஐ.டி நிறுவனத்தின் முன்னாள் மாணவர் (1998 பிரிவு) திரு திருப்பூமி பாலுசாமி கௌரவ விருந்தினராகக்  கலந்து கொண்டார். இந்நிறுவனத்தின் இயக்குநர் டாக்டர் ஜி. அகிலா, இதுபோன்ற நிகழ்ச்சிகளில் பங்கேற்க மாணவர்களை ஊக்குவித்தார். 2023-24-ம் ஆண்டுக்கான மாரத்தான் போட்டியில் வேதிப் பொறியியல் துறையைச் சேர்ந்த எல். அனுபவ், கட்டிடக்கலைத் துறையைச் சேர்ந்த ரிதி ஆகியோர் வெற்றியாளர்களாக அறிவிக்கப்பட்டனர்., ஆசிரியர் நலத்துறைத் தலைவர் திரு குமரேசன், மாணவர் நலத்துறைத் தலைவர் முனைவர் இரா. கார்வேம்பு, ஒருங்கிணைப்பாளர்கள் முனைவர் அ. சாலமன் ராஜா, திரு டேல்லி கிருஷ்ணன் மற்றும் விளையாட்டு அதிகாரிகள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

எம்.பிரபாகரன்

Leave a Reply