இந்தியாவின் குடியரசு துணைத்தலைவரும், மாநிலங்களவைத் தலைவருமான திரு. ஜக்தீப் தன்கர், 75 ஆண்டுகால நாடாளுமன்றப் பயணத்தின் முக்கியத்துவத்தை இன்று வலியுறுத்தினார். மேலும் இந்திய ஜனநாயகத்தை வடிவமைத்த சாதனைகள், அனுபவங்கள், நினைவுகள் மற்றும் கற்றல்களை எடுத்துரைத்தார். நாடாளுமன்ற ஜனநாயகத்தின் மீதான “அசைக்க முடியாத நம்பிக்கை மற்றும் மக்களின் அசைக்க முடியாத நம்பிக்கை” ஆகியவற்றை சுட்டிக்காட்டிய குடியரசு துணைத்தலைவர், “நமது ஜனநாயகத்தின் வெற்றி “இந்திய மக்களாகிய நாம்” என்ற கூட்டாண்மைமிக்க , ஒருங்கிணைந்த முயற்சியாகும் என்று குறிப்பிட்டார்.
மாநிலங்களவையின் 261-வது கூட்டத்தொடரின் தொடக்க விழாவில் இன்று உரையாற்றிய திரு தன்கர், ஆகஸ்ட் 15, 1947 அன்று ‘ இலக்குடன் முயற்சித்தல், முதல் ஜூன் 30, 2017 அன்று அற்புதமான ஜி.எஸ்.டி வரிவிதிப்பு முறையை அமல்படுத்துவது வரை மாநிலங்களவையின் புனிதமான வளாகங்கள் பல மைல்கற்களைக் கண்டுள்ளன என்று குறிப்பிட்டார்.
மூன்று ஆண்டுகளாக அரசியல் நிர்ணய சபையின் விவாதங்களின் போது காணப்பட்ட கண்ணியம் மற்றும் ஆரோக்கியமான விவாதத்தை நினைவு கூர்ந்த தலைவர், சர்ச்சைக்குரிய மற்றும் மிகவும் பிளவுபடுத்தும் பிரச்சினைகள் ஒருமித்த உணர்வில் விவாதிக்கப்பட்டதாக கூறினார்.
ஆரோக்கியமான விவாதம் மலர்ந்து வரும் ஜனநாயகத்தின் அடையாளம் என்று கூறிய திரு தன்கர், இடையூறு மற்றும் குழப்பத்தை ஆயுதமாக்குவதற்கு எதிராக எச்சரித்தார். “நாம் அனைவரும் ஜனநாயக விழுமியங்களை வளர்ப்பதற்காக அரசியலமைப்பு ரீதியாக நியமிக்கப்பட்டுள்ளோம், எனவே மக்களின் நம்பிக்கையை நியாயப்படுத்தவும் நிரூபிக்கவும் வேண்டும்,” என்று அவர் வலியுறுத்தினார்.
நாடாளுமன்ற வளாகத்திற்குள் காணப்படும் “ஏற்ற இறக்கங்கள்” குறித்து அவை உறுப்பினர்கள் சிந்தித்து விவாதிக்க வேண்டும் என்று குடியரசுத் துணைத் தலைவர் வலியுறுத்தினார். “சம்விதான் சபாவிலிருந்து தொடங்கி 75 ஆண்டு கால நாடாளுமன்ற பயணம் – சாதனைகள், அனுபவங்கள், நினைவுகள் மற்றும் கற்றல்கள்” குறித்து சிந்திக்கவும் சுயபரிசோதனை செய்யவும் இந்த அமர்வு பொருத்தமான வாய்ப்பை வழங்குகிறது என்று அவர் கூறினார்.
திவாஹர்