இந்தியாவின் ஜி 20 தலைமைத்துவம் குறித்த மின்நூலான “மக்கள் ஜி 20” என்ற நூலை தகவல் ஒலிபரப்பு அமைச்சக செயலாளர் அபூர்வா சந்திரா வெளியிட்டார்.

தகவல் ஒலிபரப்பு அமைச்சகத்தின் செயலாளர் திரு அபூர்வா சந்திரா, இந்தியாவின் ஜி 20 தலைமைத்துவம் தொடர்பான “மக்கள் ஜி 20” என்ற மின்நூலை புதுதில்லியில் இன்று வெளியிட்டார். பத்திரிகை தகவல் அலுவலகத்தின் முதன்மைத் தலைமை இயக்குநர் திரு மணீஷ் தேசாய் பத்திரிகைத் தகவல் அலுவலகத்தின் பிற மூத்த அதிகாரிகள் முன்னிலையில் இந்த நூல் வெளியிடப்பட்டது.

இந்த நூல் இந்தியாவின் ஜி 20 தலைமைத்துவத்தின் முழுமையான பயணத்தை முன்வைக்கிறது. இந்த புத்தகம் மூன்று பகுதிகளைக் கொண்டுள்ளது. முதல் பகுதி,  புதுதில்லியில் செப்டம்பர் 9 மற்றும் 10-ம் தேதிகளில் நடைபெற்ற மாபெரும் ஜி 20 உச்சிமாநாட்டைப் பற்றியதாகும்.

இரண்டாவது பகுதி பல்வேறு பணிக்குழுக் கூட்டங்கள் தொடர்பான சுருக்கத் தகவல்களையும், இந்தியா தலைமைத்துவப் பொறுப்பேற்றதிலிருந்து கூட்டங்கள் தொடர்பான சுருக்கமான தகவல்களையும் வழங்குகிறது.

இந்த மின்நூலின் கடைசிப் பகுதியில், இந்தியாவின் ஜி 20 தலைமைத்துவத்தை மக்கள் பங்களிப்பு கொண்ட இயக்கமாக மாற்றி நாடு முழுவதும் நடைபெற்ற நிகழ்வுகளின் புகைப்படங்களுடன் கூடிய கட்டுரைத் தொகுப்புகளை வழங்குகிறது.

எம்.பிரபாகரன்

Leave a Reply