2022 நவம்பர் முதல் 2023 ஆகஸ்ட் வரை மாதாந்திர அடிப்படையில் நிலுவையில் உள்ள விவகாரங்களைக் குறைப்பதற்கான சிறப்பு இயக்கத்தை உள்துறை அமைச்சகம் நடத்தியது. மக்கள் வந்து செல்லும் கள, வெளியூர் அலுவலகங்களில் சிறப்புக் கவனம் செலுத்தி அமைச்சகத்தால் பல்வேறு இடங்களில் மொத்தம் 3,438 தூய்மை இயக்கங்கள் நடத்தப்பட்டுள்ளன.
அப்போது நாடாளுமன்ற உறுப்பினர்களின் 632 குறிப்புகள், 37 நாடாளுமன்ற உத்தரவாதங்கள், 6 அமைச்சரவை பரிந்துரைகள், 213 மாநில அரசு மேற்கோள்கள் மற்றும் 47 பிரதமர் அலுவலக மேற்கோள்கள் தீர்க்கப்பட்டன. மேலும், 2022 நவம்பர் முதல் 2023 ஆகஸ்ட் வரை பெறப்பட்ட மொத்தம் 38,550 மக்கள் குறைகள் மற்றும் 4,159 பொதுமக்கள் குறைதீர்ப்பு மேல்முறையீட்டு மனுக்களுக்கு அமைச்சகம் தீர்வு கண்டுள்ளது. மத்திய ஆயுதக் காவல்படை அலுவலகங்களில் மொத்தம் 25,504 சதுர அடி இடம் விடுவிக்கப்பட்டுள்ளது.
சிறப்பு இயக்கத்தின் முந்தைய நிகழ்வுகளின் வெற்றியால் ஊக்குவிக்கப்பட்ட உள்துறை அமைச்சகம், நிர்வாக சீர்திருத்தங்கள் மற்றும் பொதுமக்கள் குறைதீர்ப்புத் துறையால் மேற்கொள்ளப்படும் சிறப்பு இயக்கம் 3.0 இன் தயாரிப்பு கட்டம் (15-30 செப்டம்பர், 2023) மற்றும் செயலாக்க கட்டம் (02-31 அக்டோபர், 2023) ஆகியவற்றின் போது ஒரு செயலூக்கமான பங்கேற்பாளராக செயல்பட முழுமையாக உறுதிபூண்டுள்ளது.
2023 அக்டோபர் 02 முதல் 2023 அக்டோபர் 31 வரை நடைபெறவிருக்கும் சிறப்பு இயக்கம் 3.0 உயர்நிலை அளவில் கண்காணிக்கப்படுகிறது.
திவாஹர்