சுகாதார அமைப்புகளின் மீள்திறனை வலுப்படுத்துவதற்கான ஒரு கூட்டு செயல்திட்டத்தை உருவாக்குதல்” குறித்த தேசிய நகர்ப்புற சுகாதார மாநாட்டிற்கு மத்திய சுகாதாரத் துறை செயலாளர் சுதான்ஷ் பந்த் தலைமை தாங்கினார்.

மத்திய சுகாதாரத் துறை  செயலாளர் திரு சுதான்ஷ் பந்த், “சுகாதார அமைப்புகளின் மீள்திறனை வலுப்படுத்துவதற்கான கூட்டு செயல்திட்டத்தை உருவாக்குதல்” என்ற தலைப்பில் தேசிய நகர்ப்புறங்களில் சுகாதார மாநாட்டிற்கு தலைமை தாங்கினார். வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகத்தின் செயலாளர் திரு மனோஜ் ஜோஷியும் உடனிருந்தார்.

கூட்டத்தில் உரையாற்றிய சுகாதாரத் துறை  செயலாளர், நகர்ப்புற மட்டத்தில் ஆரம்ப மற்றும் இரண்டாம் நிலை சுகாதார வலையமைப்பை வலுப்படுத்த வேண்டியதன் அவசியத்தை எடுத்துரைத்தார். அந்தந்த மாநிலங்களுக்கு உயர்தர சுகாதார சேவைகளை வழங்குவதில் மகாராஷ்டிரா மற்றும் குஜராத்தில் உள்ள நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளின்  குறிப்பிடத்தக்க தாக்கத்தை மேற்கோள் காட்டிய அவர், “சுகாதார சேவைகளின் நிலை நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளின் ஈடுபாடு மற்றும் பங்கேற்புடன் கணிசமாக மேம்படும், அதே நேரத்தில் இது சுகாதார சேவைகளை நகர்ப்புறவாசிகளுக்கு மிகவும் மலிவானதாகவும் அணுகக்கூடியதாகவும் மாற்றும்” என்று வலியுறுத்தினார்.

சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம் மற்றும் வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகம் ஆகியவற்றுக்கு இடையிலான முயற்சிகளின் ஒருங்கிணைப்பைப் பாராட்டிய திரு சுதான்ஷ் பந்த், “சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம், வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகம் மற்றும் தேசிய / மாநில குழுக்கள் ஒன்றிணைந்து செயல்படுவதன் மூலம் நகர்ப்புற மக்களுக்கு மிகவும் நிலையான, ஆரோக்கியமான மற்றும் பாதுகாப்பான நகர்ப்புற சூழலுக்கு வழிவகுக்கும்” என்று கூறினார். அனைத்து மாநிலங்களும் யூனியன் பிரதேசங்களும் சிறந்த சுகாதார சேவை வழங்கலுக்கான இடைவெளிகளை நிரப்ப  முயற்சிக்க வேண்டும் என்றும் அவர் வேண்டுகோள் விடுத்தார். நமது நகர்ப்புற சுகாதார சுற்றுச்சூழல் அமைப்பை வலுப்படுத்த வலுவான ஒத்துழைப்பை உருவாக்குவதற்கான சிறந்த நடைமுறைகளைப் பகிர்ந்து கொள்வதை அவர் ஊக்குவித்தார்.

எம்.பிரபாகரன்

Leave a Reply