பேச்சுவார்த்தை மூலம் தீர்வு-1 திட்டத்தின் கீழ் 10,000-க்கும் அதிகமான எம்.எஸ்.எம்.இ.க்களின் கோரிக்கைகள் ஏற்றுக் கொள்ளப்பட்டன.

கொவிட் -19 பெருந்தொற்று காலத்தில் எம்.எஸ்.எம்.இ.க்களுக்கு நிவாரணம் வழங்குவதை நோக்கமாகக் கொண்ட பேச்சுவார்த்தை மூலம் தீர்வு – 1 திட்டத்தின் கீழ் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு (எம்.எஸ்.எம்.இ) மத்திய அரசின் பல்வேறு அமைச்சகங்கள்/துறைகள் 10,000-க்கும் அதிகமான எம்.எஸ்.எம்.இ. க்களின் கோரிக்கைகளை ஏற்றுக்கொண்டுள்ளன. இதன் மூலம் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு ரூ.256 கோடிக்கு மேல் கடன் வழங்கப்பட்டுள்ளதுடன், உத்தரவாதங்களை விடுவிப்பதன் மூலம் வங்கிக் கடன் வழங்குவது அதிகரித்துள்ளது.

அதிகபட்சமாக ரூ.116.47 கோடியை மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகம் வழங்கியுள்ளது. இதில் தீர்வு காணப்பட்ட கோரிக்கைகள், பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சக நிர்வாகக் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள முகவர்களால் செலுத்தப்பட்ட தொகை ஆகியவை அடங்கும்.

தீர்க்கப்பட்ட உரிமை கோரல்கள், செலுத்தப்பட்ட தொகை ஆகியவற்றின் அடிப்படையில் முதல் ஐந்து அமைச்சகங்களின் செயல்திறன் கீழே உள்ள அட்டவணையில் கொடுக்கப்பட்டுள்ளது:

அமைச்சகத்தின்பெயர் செலுத்தப்பட்டதொகை (கோடி) ஏற்கப்பட்டஉரிமைக்கோரல்எண்ணிக்கை
பெட்ரோலியஇயற்கைஎரிவாயுஅமைச்சகம் 116.47 2,807
ரயில்வேஅமைச்சகம் 79.16 2,090
பாதுகாப்புஅமைச்சகம் 23.45 424
எஃகுஅமைச்சகம் 14.48 244
மின்சாரஅமைச்சகம் 6.69 119

2023-24 ஆம் ஆண்டிற்கான பட்ஜெட் உரையில் எம்.எஸ்.எம்.இ.க்களுக்கான பேச்சுவார்த்தை மூலம் தீர்வு -1  நிவாரணத் திட்டத்தை மத்திய நிதியமைச்சர் அறிவித்தார். இத்திட்டம் 17.04.2023 அன்று நிதி அமைச்சகத்தால் அரசு இ-சந்தை (ஜி.இ.எம்) போர்ட்டல் மூலம் தொடங்கப்பட்டது.  இத்திட்டத்தின் கீழ், ஜி.இ.எம் போர்ட்டலில் நிவாரணத்திற்கான உரிமைகோரல்களை சமர்ப்பிக்க கடைசி தேதி 31.07.2023 ஆகும்.  இத்திட்டத்தின் நோக்கத்திற்காக ஜி.இ.எம் ஒரு சிறப்பு போர்ட்டலை உருவாக்கியுள்ளது.

கொவிட் -19 பெருந்தொற்றால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள எம்.எஸ்.எம்.இ துறையை மேம்படுத்துவதற்கும் நிலைநிறுத்துவதற்கும் அரசு முயற்சிகளின் தொடர்ச்சியாக இந்தத் திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட நிவாரணம் இருந்தது.

திவாஹர்

Leave a Reply