தூத்துக்குடி, நடராஜபுரம் ஸ்ரீகைவல்ய மடலாயம் நடராஜர் ஆலயத்தில், திருஆதிரைத் திருவிழா இன்று (05.01.2015) அதிகாலை 5 மணி அளவில் தொடங்கி கஜபூஜை, கோபூஜை மற்றும் விசேட அபிஷேக தீப ஆராதனைகள் நடைபெற்றன.
பக்தர்களுக்கு திருஆதிரைத் திருவிழாவின் சிறப்பு பிரசாதமான திருஆதிரைக் களி வழங்கப்பட்டது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். விழா ஏற்பாட்டை திருஆதிரைத் திருவிழா குழுவினர் சிறப்பாகச் செய்திருந்தனர்.
-பி.கணேசன் @ இசக்கி.