அக்டோபர் 11 ஆம் தேதி ஜெனீவாவில் நடைபெறவுள்ள டி.ஐ.ஆர் நிர்வாகக் குழு தேர்தலில் (டி.ஐ.ஆர். – எக்ஸ்.பி) இந்தியாவின் மனுவுக்கு சிபிஐசி ஆதரவு திரட்டுகிறது.

டி.ஐ.ஆர் கார்னெட்ஸ் (டி.ஐ.ஆர் மாநாடு, 1975 – the Convention on International Transport of Goods Under Cover of TIR Carnets) என்ற சரக்குகளின் சர்வதேச போக்குவரத்து மாநாட்டுக்கான ஒப்பந்த அமைப்பின் உறுப்பினர்கள், தூதர்கள் மற்றும் பிரதிநிதிகளுக்கான தேர்தல் தொடர்பாக புதுதில்லியில் நேற்று (29-09-2023) ஒரு நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. மத்திய நிதி அமைச்சகத்தின் மறைமுக வரிகள் மற்றும் சுங்க வாரியம் (சிபிஐசி), வெளியுறவு அமைச்சகத்துடன் இணைந்து இந்த நிகழ்ச்சியை நடத்தியது. இதற்கான தேர்தல்களை 11.10.2023 அன்று ஜெனீவாவில் டி.ஐ.ஆர் நிர்வாகக் குழுவின் 81 வது அமர்வின் போது நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த டி.ஐ.ஆர்.எக்ஸ்.பி தேர்தலுக்கான இந்தியாவின் வேட்புமனுவுக்கு, சிபிஐசி-யின் முதன்மை ஆணையரும் சர்வதேச சுங்க உறவுகளின் தலைவருமான திரு. விமல் குமார் ஸ்ரீவஸ்தவா ஆதரவு திரட்டினார். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட வெளிநாட்டு பிரதிநிதிகளிடம் அவர் ஆதரவு கோரினார்.  இந்த உடன்படிக்கையின் கீழ் சர்வதேச போக்குவரத்து கட்டமைப்புகளுடன் ஒருங்கிணைந்து செயல்பட இந்தியா விரும்புகிறது என்றும் பிராந்திய ஒருங்கிணைப்பு, பொருளாதார வளர்ச்சி போன்றவற்றில் ஒருங்கிணைப்பு முக்கிய பங்கு வகிக்கிறது என்பதை இந்தியா அங்கீகரிப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது. டி.ஐ.ஆர் நிர்வாகக் குழுவில் இந்தியாவின் பிரதிந்தித்துவம் தேர்ந்தெடுக்கப்படுவதன் மூலம், பல்நோக்கு போக்குவரத்து அமைப்பின் உலகளாவிய ஒருங்கிணைப்பிற்கு இந்தியா கணிசமாக பங்களிக்க விரும்புகிறது என்று அப்போது கூறப்பட்டது.

எம்.பிரபாகரன்

Leave a Reply