சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகளுக்கான மத்திய அமைச்சர் திரு நிதின் கட்கரி, செக் குடியரசின் ப்ராக் நகரில் நடைபெற்ற 27வது உலக சாலை மாநாட்டில் சாலைப் பாதுகாப்பில் கவனம் செலுத்தி அமைச்சர்கள் அமர்வில் உரையாற்றினார்.
அனைத்து மட்டங்களிலும் பங்குதாரர்களால் சாலை விபத்துகள் மற்றும் உயிரிழப்புகளைக் குறைக்க முழுமையான அணுகுமுறையை கடைப்பிடிப்பதை ஸ்ரீ கட்கரி வலியுறுத்தினார். நடத்தை மாற்றத்தை ஏற்படுத்த விழிப்புணர்வை பரப்புவது மற்றும் விதிகளை குறைபாடற்ற அமலாக்கத்தை உறுதி செய்வதில் பாரதத்தின் சிறப்பு கவனம் செலுத்துவதை அவர் மீண்டும் வலியுறுத்தினார்.
BHARAT NCAP போன்ற முதன்மைத் திட்டங்களுடன் வாகனப் பாதுகாப்புத் துறையில் இந்தியா எடுத்து வரும் முன்னேற்றங்களை அமைச்சர் மேலும் விவரித்தார், மேலும் ஸ்டாக்ஹோம் பிரகடனத்தில் நிர்ணயித்த உலகளாவிய சாலைப் பாதுகாப்பு இலக்குகளை அடைவதற்கான எங்கள் உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்தினார்.
எம்.பிரபாகரன்