இரண்டு இருக்கைகள் கொண்ட இலகு ரக தேஜஸ் ஹெலிகாப்டரை இந்திய விமானப்படையிடம் பாதுகாப்பு இணையமைச்சர் அஜய் பட் ஒப்படைத்தார்.

பாதுகாப்பு இணையமைச்சர் திரு அஜய் பட், இலகு ரக தேஜஸ் ஹெலிகாப்டர் பாதுகாப்பு உற்பத்தியில் தன்னிறைவை நோக்கிய இந்தியாவின் பயணத்தைக் குறிக்கிறது என்று கூறியுள்ளார். வெளிநாட்டு விமானங்களை நாடு சார்ந்திருப்பதைக் குறைப்பதற்கான உறுதிப்பாட்டிற்கு இந்தத் திட்டம் ஒரு பிரகாசமான எடுத்துக்காட்டு என்றும், மேலும் இது தற்சார்பு இந்தியாவுக்கு நம்பிக்கையின் கலங்கரை விளக்கமாக செயல்படுகிறது என்றும் அவர் குறிப்பிட்டார். 2023, அக்டோபர் 04  அன்று பெங்களூரில் உள்ள இந்திய விமானப்படைக்கு இலகு ரக தேஜஸ் இரண்டு இருக்கை  கொண்ட ஹெலிகாப்டரை ஒப்படைக்கும் விழாவில் அவர் இதனைத் தெரிவித்தார்.

இலகு ரக தேஜஸ் திட்டத்தின் முக்கியத்துவத்தை சுட்டிக்காட்டிய பாதுகாப்பு இணையமைச்சர், ஒரு அதிநவீன போர் விமானத்தை உருவாக்குவதற்கான மிகவும் தேவையான அறிவை நாடு பெற்றுள்ளது. விண்வெளி சுற்றுச்சூழல் அமைப்பை உருவாக்கி வளர்த்துள்ளது என்று அவர் கூறினார். இலகு ரக தேஜஸ்சின் வளர்ச்சி இந்தியாவில் ஒரு வலுவான பாதுகாப்பு மற்றும் விண்வெளித் துறையின் வளர்ச்சியைத் தூண்டியுள்ளது என்று அவர் தெரிவித்தார். இந்தத் திட்டத்தின் பல்வேறு அம்சங்களில் பங்களித்த எண்ணற்ற சிறிய மற்றும் நடுத்தர நிறுவனங்கள், ஆராய்ச்சி நிறுவனங்கள் மற்றும் திறமையான தொழிலாளர்களுக்கு இது வாய்ப்புகளை உருவாக்கியுள்ளதாக அவர் கூறினார்.

இது இந்திய விமானப்படை விமானிகளுக்கு பொருத்தமான பயிற்சியை வழங்கும் . இந்திய விமானப்படை ஏற்கனவே 83 இலகு ரக தேஜஸ் ஹெலிகாப்டரை கொள்முதல் செய்ய  ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனத்திடம் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.

எஸ்.சதிஸ்சர்மா

Leave a Reply