2023, அக்டோபர், 04 புதன்கிழமை நடைபெற்ற உள்நாட்டு வெளிச்சந்தை விற்பனை திட்டத்தின் கீழ் 15 -வது மின் ஏலத்தில், மொத்தம் 1.89 லட்சம் மெட்ரிக் டன் கோதுமை, 0.05 எல்.எம்.டி அரிசி 2255 ஏலதாரர்களுக்கு விற்பனை செய்யப்பட்டது. நாடு முழுவதும் உள்ள 481 கிடங்குகளில் இருந்து 2.01 லட்சம் மெட்ரிக் டன் கோதுமையும், 264 கிடங்குகளில் இருந்து 4.87 லட்சம் மெட்ரிக் டன் அரிசியும் வழங்கப்பட்டன.
அரிசி, கோதுமை, மைதா ஆகியவற்றின் சில்லறை விலையைக் கட்டுப்படுத்தும். சந்தைத் தலையீட்டிற்கான மத்திய அரசு முன்முயற்சியின் ஒரு பகுதியாக, கோதுமை மற்றும் அரிசியின் வாராந்திர மின்னணு ஏலங்கள் ஏற்பாடு செய்யப்படுகின்றன. இ-ஏலத்தில், 2,447 பேர், கோதுமை மற்றும் அரிசியை வாங்கிச் சென்றனர்.
நாடு முழுவதிலும் இருப்பு விலை குவிண்டாலுக்கு ரூ. 2150 ஆக இருந்த நிலையில், சராசரி விற்பனை விலை ரூ.2185.05 ஆகவும், யு.ஆர்.எஸ் கோதுமையின் இருப்பு விலை குவிண்டாலுக்கு ரூ. 2125-ஆக இருந்த நிலையில், எடையிடப்பட்ட சராசரி விற்பனை விலை குவிண்டாலுக்கு ரூ.2193.12 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் அரிசியின் சராசரி விற்பனை விலை ரூ.2932.91 ஆகவும், இருப்பு விலை ரூ.2932.83 ஆகவும் இருந்தது.
தற்போதைய மின்னணு ஏலத்தில் மூலம் சில்லறை விலைக் குறைப்புக்கு கோதுமை வாங்குபவருக்கு அதிகபட்சமாக 10 முதல் 100 டன் வரையிலும், அரிசிக்கு 10 முதல் 1000 டன் வரையிலும் வழங்குவதன் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
கையிருப்பு பதுக்கலைத் தவிர்ப்பதற்காக, வணிகர்கள் கோதுமை விற்பனை வரம்பிலிருந்து விலக்கி வைக்கப்பட்டனர்.
திவாஹர்