மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் திரு நிதின் கட்கரி வெளியிட்டுள்ள ஒரு பதிவில், நாட்டில் சீரான போக்குவரத்திற்கான உள்கட்டமைப்பை வலுப்படுத்துவது மோடி அரசின் முன்னுரிமையாகும். மத்திய சாலை மற்றும் உள்கட்டமைப்பு நிதியின் கீழ் இமாச்சலப் பிரதேசத்தின் உனா மற்றும் காங்க்ரா பிராந்தியத்திற்கு ரூ .154.25 கோடி மதிப்புள்ள திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது என்று கூறியுள்ளார்.
சமீபத்தில், இமாச்சலப் பிரதேசம் இயற்கை பேரழிவுகளால் பாதிக்கப்பட்டுள்ளது என்றும், இது தொடர்பாக, இமாச்சலப் பிரதேசத்தில் உள்கட்டமைப்புக்கான புதிய ஒப்புதல்கள் குறித்து பாஜக தேசியத் தலைவர் திரு ஜே.பி.நட்டா மற்றும் மத்திய அமைச்சர் திரு அனுராக் தாக்கூர் ஆகியோருடன் விரிவான கலந்துரையாடல் நடைபெற்றதாகவும் திரு கட்கரி தெரிவித்துள்ளார்.
இந்த ஒப்புதலின் கீழ் ஸ்வான் நதியின் குறுக்கே ரூ.50.60 கோடி செலவில் இரண்டு பாலங்களும், ரூ .103.65 கோடி செலவில் பியாஸ் ஆற்றில் பாங் அணையும் கட்டப்படும் என்று அமைச்சர் நிதின் கட்கரி தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
திவாஹர்