இந்தியக் கடற்படையில் முதன்முறையாக 360 டிகிரி மதிப்பீட்டு முறை .

இந்திய கடற்படையின் ‘கப்பல்கள் முதலில்’ அணுகுமுறையின் மையமாக வெண்ணிற சீருடையில் படையின் வீரர், வீராங்கனைகள் திகழ்கின்றனர். அவர்களின் தொழில்முறை மற்றும் தனிப்பட்ட வளர்ச்சியை ஊக்குவிக்க,சுறுசுறுப்பான, தகவமைப்பு மற்றும் மேம்பட்ட மனித வள மேலாண்மை அவசியம் என்பதை இந்தியக் கடற்படை அங்கீகரித்துள்ளது.

அந்த வகையில், இந்தியக் கடற்படை பல்வேறு பதவி உயர்வு வாரியங்களுக்கு ‘360 டிகிரி மதிப்பீட்டு பொறிமுறை’ என்ற புதுமையான மாற்ற முயற்சியை நிறுவியுள்ளது.

இந்தியக் கடற்படையின் ‘360 டிகிரி மதிப்பீட்டு பொறிமுறை’ பதவி உயர்வுக்கு பரிசீலிக்கப்படும் ஒவ்வொரு அதிகாரிக்கும் பொருத்தமான அடையாளம் காணப்பட்ட சகாக்கள் மற்றும் கீழ்நிலை ஊழியர்களிடமிருந்து பெரிய அளவிலான கணக்கெடுப்புகளை உள்ளடக்குவதன் மூலம் பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

தொழில்முறை அறிவு, தலைமைத்துவ பண்புகள், போர், நெருக்கடியில் பொருத்தம் மற்றும் உயர் பதவிகளை வகிப்பதற்கான சாத்தியக்கூறுகள் போன்ற அம்சங்களை உள்ளடக்கிய பல கேள்விகளை இந்த ஆய்வு உள்ளடக்கியது.

இவ்வாறு பெறப்படும் உள்ளீடுகள், கொடி அலுவலர் தலைமையிலான நியமன அலுவலர் குழுவால் சுதந்திரமான பகுப்பாய்வுகளுக்கு பொருத்தமான முறையில் அளவிடப்படுகின்றன. இது நடத்தை மாற்றங்கள் மற்றும் மேம்பாடுகளை ஏற்படுத்த அதிகாரிகளுக்கு பின்னூட்டமாக வழங்கப்படும்.

இதே போன்ற மதிப்பீட்டு முறைகள் பல்வேறு தேசிய மற்றும் சர்வதேச கற்றல் நிறுவனங்களில் நடைமுறையில் உள்ளன. இத்தகைய ‘சிறந்த நடைமுறைகளை’ உள்வாங்குவதில் இந்தியக் கடற்படை பெருமிதம் கொள்கிறது, மேலும் இந்த முயற்சி ‘போருக்குத் தயாரான, நம்பகமான, ஒருங்கிணைந்த மற்றும் எதிர்கால ஆதாரப் படையாக’ இருப்பதற்கான பிற முயற்சிகளின் தொடர்ச்சியாகும்.

திவாஹர்

Leave a Reply