மத்திய அரசின் உணவு மற்றும் பொது விநியோகத் துறையானது, தனது துறையுடன் தொடர்புடைய அலுவலகங்களில் தூய்மை பணிகள் மற்றும் நிலுவையில் உள்ள விஷயங்களை மேற்கொள்வது குறித்த சிறப்பு இயக்கத்தை நாட்டின் பல்வேறு பகுதிகளில் நடத்தி வருகிறது.
செப்டம்பர் 15ஆம் தேதி முதல் தூய்மை பணி காலத்தில் சுத்தம் செய்ய வேண்டிய இலக்குகளை அடையாளம் காண்பதற்கான ஆயத்த கட்டத்துடன் இந்தப் பணிகள் தொடங்கின. இதனை செயல்படுத்துவதற்கான காலகட்டம் என்பது வரும் 31 ஆம் தேதி வரை நீடிக்கிறது.
தூய்மைக்கான சிறப்பு இயக்கம் 3.0.வின் ஆயத்த கட்டம் தொடங்கியதிலிருந்து, இத்துறை மற்றும் அதனுடன் இணைக்கப்பட்ட அலுவலகங்களில் நாடு முழுவதும் தூய்மை படுத்த வேண்டிய 1256 இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
இது தொடர்பான ஆய்வுக் கூட்டங்களின் போது, தூய்மை இயக்கத்தின்போது மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளின் முன்னேற்றம் குறித்து துறையின் செயலாளர் விவாதித்தார், தூய்மை பணிகளுக்கான இலக்கை அடைவதில் சிறந்த முயற்சிகளை மேற்கொள்ளுமாறு அலுவலகங்களின் அனைத்து மூத்த அதிகாரிகளுக்கும் அவர் விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.
எம்.பிரபாகரன்