சமூகத்தின் விருப்பங்கள் மற்றும் உலகளாவிய பொறுப்புகளை நிறைவேற்றும் நோக்குடன் பெரிதாக சிந்தித்து முன்னேறுங்கள்; மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் அறிவுறுத்தல்.

மத்திய கல்வி மற்றும் திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவோர் அமைச்சர் திரு தர்மேந்திர பிரதான் இன்று புனேவில் கோகலே அரசியல் மற்றும் பொருளாதார கல்வி மையத்தின் 29 வது பட்டமளிப்பு விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்று உரையாற்றினார்.

பட்டமளிப்பு விழாவில் பேசிய திரு பிரதான், பட்டம் பெற்ற மாணவர்களை வாழ்த்தி, திறன்களையும் வாழ்க்கைத் திறன்களையும் மேம்படுத்த வேண்டும் என்று ஊக்குவித்தார். கோகலே அரசியல் மற்றும் பொருளாதார கல்வி மையம் என்பது பல்வேறு தரப்பினர் இணைந்து உருவாக்கும் கருத்துகள் மற்றும் அனுபவ கற்றலின் மையமாக உள்ளது என்று அவர் மேலும் கூறினார்.

நாட்டின் திறமையான இளைஞர் சக்தியால் அடுத்த இருபத்தைந்து ஆண்டுகளில் இந்தியா மிகவும் துடிப்பான நாடாக இருக்கும் என்று அவர் குறிப்பிட்டார். சமூகத்தின் விருப்பங்கள் மற்றும் உலகளாவிய பொறுப்புகளை நிறைவேற்றுவதற்கான தொலைநோக்கு பார்வையுடன் பெரிய அளவில் சிந்தித்து முன்னேற வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

21 ஆம் நூற்றாண்டு அறிவு அடிப்படையிலான சமூகமாக இருக்கப் போகிறது, அங்கு வளர்ச்சி, பொருளாதாரம் மற்றும் சமூகத்திற்கான முதன்மை ஆதாரம் அறிவாக இருக்கும் என்று அவர் கூறினார். இந்தியர்களுக்கு இப்போது உலகளாவிய பொறுப்புகள் உள்ளன, அவர்களின் பார்வைகள் மற்றும் நடவடிக்கைகள் முழு உலகையும் நோக்கி செலுத்தப்பட வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.

இந்த நிகழ்வில் மகாராஷ்டிரா மாநிலத்தின் உயர் மற்றும் தொழில்நுட்ப கல்வி அமைச்சர் திரு. சந்திரகாந்த் பாட்டீல்; துணைவேந்தர் டாக்டர் அஜித் ரானடே, பிரமுகர்கள் , கல்வியாளர்கள் , பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர்.

எஸ்.சதிஸ் சர்மா

Leave a Reply