சீனாவில் நடைபெற்று வரும்19-வது ஆசிய விளையாட்டுப் போட்டியில் பதக்கப் பட்டியலில் இந்தியா 100-ஐத் தாண்டிய நிலையில் விளையாட்டு வீரர்களுக்கு மத்திய இளைஞர் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் திரு அனுராக் தாகூர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
“140 கோடி இந்தியர்களின் சார்பாக அனைத்து விளையாட்டு வீரர்களுக்கும் எனது வாழ்த்துக்கள். அவர்கள் எதிர்கால விளையாட்டு வீரர்களுக்கு உத்வேகம் அளிப்பவர்கள். 72 ஆண்டுகால ஆசிய விளையாட்டு வரலாற்றில் இந்த முறை நமது வீரர்கள் பல சாதனைகளை முறியடித்து பல புதிய ஆசிய சாதனைகளையும் படைத்துள்ளனர். தடகளத்தில் 29 பதக்கங்களும், துப்பாக்கி சுடுதலில் 22 பதக்கங்களும் புதிய சாதனைகளாகும்’’ என்று அவர் சமூக ஊடக தளத்தில் கூறியுள்ளார்.
அனுராக் சிங் தாக்கூர் மேலும் கூறுகையில், “பிரதமர் மோடியின் தொலைநோக்கு பார்வை மற்றும் அவர் வழங்கிய வசதிகள் மற்றும் நமது வீரர்களின் கடின உழைப்பு மற்றும் உறுதிப்பாடு ஆகியவை இந்தியா 100 பதக்கங்களை வெல்வதை உறுதி செய்தன. இந்த ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் வரலாறு படைத்த அனைத்து விளையாட்டு வீரர்களுக்கும் நான் வணக்கம் செலுத்துகிறேன்’’ என்று தெரிவித்துள்ளார்.
ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் ஹாக்கி அணி சிறப்பாக செயல்பட்டதாகவும், இது எதிர்கால போட்டிகளில் நம்பிக்கையுடன் செல்ல உதவும் என்றும் அவர் கூறியுள்ளார். பிரதமர் மோடி “விளையாடினால் மலர்வீர்கள்” என்ற கோஷத்தை முன்னெடுத்தார் என்றும், சிந்தனை செயல்முறையை மாற்றுவதன் மூலமும், வசதிகளை வழங்குவதன் மூலமும் முடிவுகள் சாதகமாக வரும், இது இன்று நடக்கிறது என்று அனுராக் சிங் தாக்கூர் கூறியுள்ளார்.
திவாஹர்