9-வது ஜி 20 நாடாளுமன்ற சபாநாயகர்கள் உச்சிமாநாட்டை (பி 20) அக்டோபர் 13 அன்று பிரதமர் நரேந்திர மோதி தொடங்கி வைக்கிறார்.

புதுதில்லியில் உள்ள யசோபூமியில் 9-வது ஜி 20 நாடாளுமன்ற சபாநாயகர்கள் உச்சிமாநாட்டை (பி 20) பிரதமர் திரு. நரேந்திர மோடி அக்டோபர் 13 அன்று காலை 11 மணியளவில் தொடங்கி வைக்கிறார். இந்தியாவின் ஜி20 தலைமைத்துவத்தின் பரந்த கட்டமைப்பின் கீழ் இந்த உச்சிமாநாட்டை இந்திய நாடாளுமன்றம் நடத்துகிறது.

இந்தியாவின் ஜி20 தலைமைத்துவத்தின் கருப்பொருளுக்கு ஏற்ப, 9 வது பி 20 உச்சி மாநாட்டின் கருப்பொருள் “ஒரே பூமி, ஒரே குடும்பம், ஒரே எதிர்காலத்திற்கான நாடாளுமன்றங்கள்” என்பதாகும். இந்த நிகழ்வில் ஜி20 உறுப்பு நாடுகளின் நாடாளுமன்ற சபாநாயகர்கள் மற்றும் அழைப்பாளர்கள் கலந்து கொள்கின்றனர். புதுதில்லி செப்டம்பர் 9-10, 2023-யில் நடைபெற்ற ஜி 20 தலைவர்கள் உச்சிமாநாட்டில் ஆப்பிரிக்க ஒன்றியம் ஜி20-ல் உறுப்பினரான ஆன பின் ஆப்பிரிக்க நாடுகளின் நாடாளுமன்றம் முதல் முறையாக பி20 உச்சிமாநாட்டில் பங்கேற்கும்.

இந்த பி20 உச்சிமாநாட்டின் கருப்பொருள் அமர்வுகள், பொது டிஜிட்டல் தளங்கள் மூலம் மக்களின் வாழ்க்கையில் மாற்றம்; பெண்கள் தலைமையிலான வளர்ச்சி; நிலையான வளர்ச்சி இலக்குகளை விரைவுபடுத்துதல்; நிலையான எரிசக்தி மாற்றம் ஆகிய நான்கு தலைப்புகளில் கவனம் செலுத்தும்.

நாடாளுமன்ற அமைப்பின் உச்சிமாநாட்டிற்குமுன் இயற்கையுடன் இணங்கிய பசுமையான மற்றும் நிலையான எதிர்காலத்தை நோக்கிய முன்முயற்சிகள் குறித்து விவாதிப்பதற்காக அக்டோபர் 12 அன்று லைஃப் (சுற்றுச்சூழலுக்கான வாழ்க்கை முறை) குறித்த உச்சி மாநாடும் நடைபெறும்.

திவாஹர்

Leave a Reply